சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : செப் 17, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க., செயலர் பொள்ளாச்சி ஜெயராமன்: இலங்கை தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே, அதே இலங்கையை விட்டு குடும்பத்தினருடன் தப்பி ஓடினார். வரிகளை உயர்த்தி, தமிழக மக்களை வஞ்சிக்கும், தி.மு.க.,வுக்கும் இதே நிலை தான் ஏற்படும்.டவுட் தனபாலு: போன ஆட்சியில, துணை சபாநாயகரா மட்டும் இருந்த துணிச்சல்ல, ஆளுங்கட்சிக்கு எதிரா ஆவேசம் காட்டுறீங்க... இதே, வளமான துறைகளுக்கு

'டவுட்' தனபாலு

திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க., செயலர் பொள்ளாச்சி ஜெயராமன்: இலங்கை தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே, அதே இலங்கையை விட்டு குடும்பத்தினருடன் தப்பி ஓடினார். வரிகளை உயர்த்தி, தமிழக மக்களை வஞ்சிக்கும், தி.மு.க.,வுக்கும் இதே நிலை தான் ஏற்படும்.

டவுட் தனபாலு: போன ஆட்சியில, துணை சபாநாயகரா மட்டும் இருந்த துணிச்சல்ல, ஆளுங்கட்சிக்கு எதிரா ஆவேசம் காட்டுறீங்க... இதே, வளமான துறைகளுக்கு அமைச்சரா இருந்து, வாரி குவிச்சிருந்தா, அடக்கி வாசிப்பீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!


பத்திரிகை செய்தி:
'அந்தந்த சட்டசபை தொகுதியில் உள்ள முக்கியமான, 10 பிரச்னைகள் குறித்த மனுக்களை, கலெக்டரிடம் எம்.எல்.ஏ.,க்கள் வழங்க வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி, சேப்பாக்கம் எம்.எல்.ஏ., உதய நிதி, தன் தொகுதிக்கு உட்பட்ட மக்களின் கோரிக்கைகளை, சென்னை கலெக்டர் அமிர்தஜோதியிடம் மனுவாக அளித்தார்.

டவுட் தனபாலு: முதல்வர் இல்லத்துலயே குடியிருக்கிற நீங்க, ஒரு போன் போட்டா, தொகுதி பிரச்னைகள் சொடக்கு போடும் நேரத்துல தீர்ந்துடுமே... சினிமாவுல சீரியசா நடிக்கிற நீங்க, அரசியல்ல அருமையா காமெடி பண்றீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!


அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்:
கோஷ்டிக்கும், கட்சிக்கும் வித்தியாசம் உள்ளது. பன்னீர்செல்வம் என்பவர் கோஷ்டி. கட்சி என்றால், மக்கள் பிரச்னைக்கு போராட வேண்டும். அவரிடம் பலம் இருந்திருந்தால், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் அறிவித்திருக்கலாமே; கூட்டம் நடத்த ஆள் இல்லை. தினகரனுடன் கூட்டு சேர்ந்து, பாழாய் போய் விட்டார் பன்னீர்செல்வம்.

டவுட் தனபாலு: தினகரனுடன் ஒரு காலத்துல கூட்டு சேர்ந்தவர் தான், இப்ப உங்க கட்சிக்கு தற்காலிக பொதுச் செயலரா இருக்காருங்கிறதை மறந்துட்டீங்களா என்பது தான் எங்க, 'டவுட்!'
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்: ஜனநாயகத்தை நாம் விழிப்போடு பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். கடமையை நாம் செய்யாவிட்டால், ஜனநாயகம் என நம்பிக் கொண்டிருக்கும் பலம், திருடர்கள் கையில் தான் இருக்கும். தேர்தலில் ஓட்டளிப்பது, ஜனநாயகத்திற்கு கொடுக்கும் முதல் முத்தம். அந்த முத்தம் கொடுத்தால் தான், ஜனநாயகத்துடன் குடும்பம் நடத்த முடியும்.

டவுட் தனபாலு: வயசு, 67 ஆகுது... அரசு ஊழியரா இருந்திருந்தா, வீட்டுல ஈசி சேர்ல படுத்துட்டு, பென்ஷன் வாங்கற வயசு... இன்னும், 25 வயது பையன் மாதிரி, முத்தம் பற்றியே யோசனை பண்றீங்களே... ஜனநாயகத்தை முத்தத்தோட, 'மிங்கிள்' செஞ்ச ஒரே ஆள் நீங்கள் தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!

பத்திரிகை செய்தி: சென்னை மெரினாவில், கருணாநிதி நினைவிடம் அருகில் கடலில், 137 அடி உயர பேனா நினைவு சின்னம் அமைப்பது குறித்து, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு மற்றும் பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்த, மத்திய அரசு உத்தரவிட்டுஉள்ளது.

டவுட் தனபாலு: 'கரன்ட் பில்'லை ஏத்த இவங்க நடத்துன கருத்து கேட்பு கூட்டம் மாதிரி, இதுக்கும் ஒரு கண்துடைப்பு கூட்டத்தை போடுவாங்க... அங்க அஞ்சாறு தி.மு.க.,வினரை பேச விட்டு, காரியத்தை கச்சிதமா முடிச்சிடுவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!


தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி:
'முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்ற, தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதி தற்போது நிறைவேற்றப்பட்டு வருகிறது.

டவுட் தனபாலு: அ.தி.மு.க., ஆட்சி பார்ட் - 1ல், போக்குவரத்து அமைச்சரா இருந்து நீங்க செய்த தவறுகளுக்கு நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு போட்டிருக்குதே... அதுவும், தி.மு.க., தந்த வாக்குறுதி கணக்கில் வருமா என்ற, 'டவுட்'டுக்கு விளக்கம் தாங்களேன்!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
18-செப்-202212:44:42 IST Report Abuse
கல்யாணராமன் சு. \\முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்ற, தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதி தற்போது நிறைவேற்றப்பட்டு வருகிறது.\\ ... அப்படின்னா தற்போதைய முதமைச்சர் உங்கள் மேல வெச்ச கடுமையான புகாருக்கு நடவடிக்கை எடுக்காமல், ரெண்டு "பசை" துறை கொடுத்திருக்கிறது எதனாலே ?
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
18-செப்-202212:42:54 IST Report Abuse
கல்யாணராமன் சு. உலக நாயகன் கமலஹாசன் ஏன் ஒரு பிட் கட்சி தலைவர் அப்படிங்கற நிலையை தாண்டி வரமாட்டார் அப்படிங்கற உண்மையை இந்த ஒரு கருத்தே டவுட் இல்லாமல் விளக்கிடும் ....
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
18-செப்-202206:26:26 IST Report Abuse
D.Ambujavalli அந்த பொள்ளாச்சி’ ஊரையே பிரபலப்படுத்திய வழக்கு அமுங்கிவிட்டதுபோல அதுதான் தெம்பாக குரல் எழும்புகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X