திருவாலங்காடில் சிக்னல் கோளாறு ரயில்கள் இரண்டு மணி நேரம் தாமதம்

Added : செப் 17, 2022 | |
Advertisement
திருவாலங்காடு:சென்னை -- அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் உள்ளது திருவாலங்காடு ரயில் நிலையம். இங்கு அரக்கோணம் மார்க்கத்தில் அரிச்சந்திராபுரம் ரயில்வே கேட் அருகே உள்ள சிக்னலில், காலை 6.55 மணிக்கு கோளாறு ஏற்பட்டது.இதனால், சென்னையில் இருந்து, கோயம்புத்துார் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் மற்றும் திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ் மற்றும் அரக்கோணம் -- சென்னை, சென்னை -- அரக்கோணம் என
திருவாலங்காடில் சிக்னல் கோளாறு ரயில்கள் இரண்டு மணி நேரம் தாமதம்

திருவாலங்காடு:சென்னை -- அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் உள்ளது திருவாலங்காடு ரயில் நிலையம். இங்கு அரக்கோணம் மார்க்கத்தில் அரிச்சந்திராபுரம் ரயில்வே கேட் அருகே உள்ள சிக்னலில், காலை 6.55 மணிக்கு கோளாறு ஏற்பட்டது.
இதனால், சென்னையில் இருந்து, கோயம்புத்துார் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் மற்றும் திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ் மற்றும் அரக்கோணம் -- சென்னை, சென்னை -- அரக்கோணம் என இருவழித் தடத்திலும் 15க்கும் மேற்பட்ட புறநகர் ரயில்கள், சிக்னல் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டன.
இதையடுத்து, தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்கள் கோளாரை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். புறநகர் ரயில்கள் பாதியில் நிறுத்தப்பட்டதால், மணவூர், திருவாலங்காடு, மோசூர், அரக்கோணம் செல்லும் பயணியர் நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து, 1 கி.மீ., துாரம் தண்டவாளத்தில் நடந்து சென்று, திருவாலங்காடு ரயில் நிலையம் சென்றடைந்து பின், சாலை போக்குவரத்து வாயிலாக சென்றனர்.
சென்னை, திருவள்ளூருக்கு பள்ளி, கல்லுாரி, பணிக்கு செல்லும் பயணியர் ரயில் தாமதத்தால் அவதியடைந்தனர். இரண்டு மணி நேரத்திற்கு பின் சிக்னல் கோளாறு சரி செய்யப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X