பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு; கேமரா பதிவு மூலம் விசாரணை

Added : செப் 17, 2022 | |
Advertisement
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டையில் பா.ஜ., ஒன்றிய தலைவர் வீட்டில், மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு தொடர்பாக முக்கிய இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டை, ஆரியநாட்டு, தெற்கு தெருவை சேர்ந்தவர் தாமரைமுருகன், 48; பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய பா.ஜ., தலைவர். இவரது, வீட்டில்



பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டையில் பா.ஜ., ஒன்றிய தலைவர் வீட்டில், மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு தொடர்பாக முக்கிய இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டை, ஆரியநாட்டு, தெற்கு தெருவை சேர்ந்தவர் தாமரைமுருகன், 48; பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய பா.ஜ., தலைவர். இவரது, வீட்டில் கடந்த 12ம் தேதி இரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர்.

இதில், வீட்டின் முன்பு போர்டிகோவில் நிறுத்திருந்த, அவரின் பொலீரோ ஜீப்பின் பின் பக்க டயர் வெடித்து, சேதமடைந்தது.இதுகுறித்து, தாமரை முருகன் கொடுத்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.மேலும், பரங்கிப்பேட்டை சலங்குக்கார தெரு, சின்னக்கடைத் தெரு, ரேவ் மெயின்ரோடு, பஸ் நிலையம், பெரிய மதகு, சஞ்சிவிராயர் கோவில் தெரு ஆகிய முக்கிய இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார், குற்றவாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி, வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X