நகை, பணம் திருடியவர் கைது| Dinamalar

நகை, பணம் திருடியவர் கைது

Added : செப் 17, 2022 | |
விழுப்புரம் : விழுப்புரத்தில் 2 வீடுகளில் நகை, பணம் திருடிய நபரை போலீசார் கைது செய்து, நகை, பணத்தை பறிமுதல் செய்தனர்.டி.எஸ்.பி., பார்த்திபன் தலைமையில், விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு புதிய பஸ் நிலையம் வீரன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, சந்தேகப்படும்படி வந்த நபரைப் பிடித்து விசாரித்தனர். அதில், சாலாமேடு,
நகை, பணம் திருடியவர் கைது



விழுப்புரம் : விழுப்புரத்தில் 2 வீடுகளில் நகை, பணம் திருடிய நபரை போலீசார் கைது செய்து, நகை, பணத்தை பறிமுதல் செய்தனர்.டி.எஸ்.பி., பார்த்திபன் தலைமையில், விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு புதிய பஸ் நிலையம் வீரன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, சந்தேகப்படும்படி வந்த நபரைப் பிடித்து விசாரித்தனர். அதில், சாலாமேடு, என்.எஸ்.கே. நகரைச் சேர்ந்த கோபிநாத், 40; எனவும், கடந்த ஜனவரி 22ம் தேதி மற்றும் ஜூலை 22ம் தேதி விழுப்புரம் பகுதியில் 2 வீடுகளில் புகுந்து நகை, பணம் திருடியது தெரியவந்தது.உடன், அவரிடமிருந்து 14 கிராம் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து, கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X