ரக்பி கால்பந்து: ஹெச்.சி.எல்., 'சாம்பியன்'கடலுார் அரசு பள்ளிக்கு 2ம் இடம்

Added : செப் 17, 2022 | |
Advertisement
சென்னை, :பள்ளி மற்றும் 'கிளப்'களுக்கு இடையிலான மாநில ரக்பி கால்பந்து போட்டியில், சிறுமியரில் ஹெச்.சி.எல்., பவுண்டேஷன் முதலிடத்தையும், கடலுார் அரசு பள்ளி அணி இரண்டாமிடத்தையும் வென்று அசத்தின.தமிழ்நாடு ரக்பி கால்பந்து யூனியன் மற்றும் சென்னை மாவட்டம் ரக்பி சங்கம் சார்பில், பாத்திமா அலி கோப்பைக்கான மாநில அளவிலான ரக்பி கால்பந்து போட்டி, நேரு விளையாட்டு அரங்கில் நேற்று
ரக்பி கால்பந்து: ஹெச்.சி.எல்., 'சாம்பியன்'கடலுார் அரசு பள்ளிக்கு 2ம் இடம்

சென்னை, :பள்ளி மற்றும் 'கிளப்'களுக்கு இடையிலான மாநில ரக்பி கால்பந்து போட்டியில், சிறுமியரில் ஹெச்.சி.எல்., பவுண்டேஷன் முதலிடத்தையும், கடலுார் அரசு பள்ளி அணி இரண்டாமிடத்தையும் வென்று அசத்தின.தமிழ்நாடு ரக்பி கால்பந்து யூனியன் மற்றும் சென்னை மாவட்டம் ரக்பி சங்கம் சார்பில், பாத்திமா அலி கோப்பைக்கான மாநில அளவிலான ரக்பி கால்பந்து போட்டி, நேரு விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது.

பள்ளி மற்றும் 'கிளப்'களுக்கு இடையிலான இப்போட்டியில், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, சிறுவர், சிறுமியர் இருபாலரிலும் தலா 17 அணிகள் என, மொத்தம் 34 அணிகள் பங்கேற்றன.ஓர் அணியில் ஏழு பேர் மட்டுமே பங்கேற்று விளையாடி, முதலில் 'லீக்' முறையிலும் காலிறுதியில் இருந்து, 'நாக் - அவுட்' முறையிலும் போட்டிகள் நடந்தன. அனைத்து போட்டிகள் முடிவில், சிறுமியரில் ஹெச்.சி.எல்., பவுண்டேஷன் மற்றும் கடலுார் மாவட்டம் இருப்பு பகுதியில் உள்ள அரசு பள்ளி அணிகள் மோதின.இதில், 10 - 0 என்ற கோல் கணக்கில் ஹெச்.சி.எல்., பவுண்டேஷன் அணி முதலிடத்தை தட்டிச் சென்றது. மூன்றாம் இடத்திற்கான போட்டியில், சென்னை பிராட்வே பகுதி 'ஸ்லம்' ரக்பி அணி, 20 - 0 என்ற கணக்கில் நடன் ஷார்க்ஸ் அணியை வீழ்த்தியது.

சிறுவர்களுக்கான இறுதிப் போட்டியில், சென்னை ராயல் கிளப் பவுண்டேஷன் அணி, 5 - 0 என்ற கோல் கணக்கில் பிராட்வே ஸ்லம் ரக்பி அணியை வீழ்த்தி முதலிடத்தைப் பிடித்தது.மூன்றாவது இடத்திற்கான போட்டியில், ஜோலார்பேட்டை ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் அணி, 20 - 0 என்ற கோல் கணக்கில், கடலுார் இருப்பு அரசு பள்ளியை வீழ்த்தி வெற்றி பெற்றது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X