தென் மண்டல ஜூனியர் தடகளம் தமிழக அணி சாம்பியன்| Dinamalar

தென் மண்டல ஜூனியர் தடகளம் தமிழக அணி சாம்பியன்

Added : செப் 17, 2022 | |
சென்னை,:ஆந்திராவில் நடந்த தென் மண்டல அளவிலான தடகளப் போட்டியில், தமிழக அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.ஆந்திர மாநிலம் குண்டூரில், 33வது தென் மண்டல அளவிலான ஜூனியர் தடகள போட்டிகள் சமீபத்தில் நடந்தன.இதில், தமிழகம் உட்பட பல்வேறு தென் மண்டலங்களுக்கு உட்பட்ட மாநில அணிகள் பங்கேற்றன. ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், மும்முறை

சென்னை,:ஆந்திராவில் நடந்த தென் மண்டல அளவிலான தடகளப் போட்டியில், தமிழக அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.ஆந்திர மாநிலம் குண்டூரில், 33வது தென் மண்டல அளவிலான ஜூனியர் தடகள போட்டிகள் சமீபத்தில் நடந்தன.



இதில், தமிழகம் உட்பட பல்வேறு தென் மண்டலங்களுக்கு உட்பட்ட மாநில அணிகள் பங்கேற்றன. ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், மும்முறை தாண்டுதல் உட்பட, தடகளத்தில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.போட்டியில், 14, 16, 18 மற்றும் 20 வயதுக்கு உட்பட்டோரில் தமிழக அணி சார்பில், 100 சிறுவர்கள் மற்றும் 98 சிறுமியர் என, மொத்தம் 198 பேர் பங்கேற்றனர்.



அனைத்து போட்டிகள் முடிவில், தமிழக அணி, 709 புள்ளிகளைக் குவித்து, ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. மொத்தம் உள்ள எட்டு பிரிவுகளில், தமிழக அணி ஆறு பிரிவில் முதல் இடத்தைப் பிடித்து முத்திரை பதித்தது.அதேபோல், 14 வயதுக்கு உட்பட்ட சிறுமியரில் கேரளாவும், சிறுவரில் தெலுங்கானாவும் முதலிடங்களை வென்றன. தவிர, மற்ற அனைத்து பிரிவுகளிலும், தமிழகம் ஆதிக்கம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X