32 அணிகள்: 'மோடி கபடி லீக்'கில் பங்கேற்பு

Added : செப் 17, 2022 | |
Advertisement
தி.நகர் :தென் சென்னை மாவட்ட அளவில் நடந்த, 'மோடி கபடி லீக்' போட்டி ஒன்றில் சாலிகிராமம் ஸ்போர்ட்ஸ் அணியை திராவிடன் குழு அணி வீழ்த்தியது. பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக பா.ஜ., விளையாட்டு திறன் பிரிவு சார்பில், மோடி கபடி லீக் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், தென் சென்னை மாவட்ட அளவிலான போட்டிகள், தி.நகரில் நேற்று துவங்கின.தி.நகர் வெங்கட்நாராயணா
32 அணிகள்: 'மோடி கபடி லீக்'கில் பங்கேற்பு

தி.நகர் :தென் சென்னை மாவட்ட அளவில் நடந்த, 'மோடி கபடி லீக்' போட்டி ஒன்றில் சாலிகிராமம் ஸ்போர்ட்ஸ் அணியை திராவிடன் குழு அணி வீழ்த்தியது. பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக பா.ஜ., விளையாட்டு திறன் பிரிவு சார்பில், மோடி கபடி லீக் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில், தென் சென்னை மாவட்ட அளவிலான போட்டிகள், தி.நகரில் நேற்று துவங்கின.தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள மாநகராட்சி விளையாட்டு திடலில் நடந்த கபடி போட்டியில், 32 கபடி குழுக்கள் பங்கேற்றுள்ளன.இதில், நேற்று நடந்த முதல் போட்டியில் திராவிடன் மற்றும் சாலிகிராமம் ஸ்போர்ட்ஸ் அணிகள் மோதின. இதில், திராவிடன் குழு 17 -- 15 என்ற புள்ளிகளுடன் வெற்றி பெற்றது. தொடர்ந்து போட்டிகள் நடந்தன; இன்றும் நடக்கிறது. வெற்றி பெறும் அணிகள், மதுரையில் நடக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறும். போட்டிகள் 27 முதல்- 30ம் தேதி வரை நடக்கின்றன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X