வண்டலுார் பூங்காவில்'காட்டு மாடு சபாரி'

Added : செப் 17, 2022 | |
Advertisement
வண்டலுார் உயிரியல் பூங்காவில், 2,400 வன உயிரினங்கள் பராமரிக்கப்படுகின்றன. இப்பூங்காவை, ஆண்டுதோறும், 20 லட்சம் பேர் கண்டு ரசிக்கின்றனர். மதிய உணவு கட்டி கொண்டு, குடும்பம் குடும்பமாக மக்கள் வருகை தருகின்றனர். 1,500 ஏக்கர் பரப்பு உடைய இப்பூங்காவினுள், அடர்ந்த காட்டுப்பகுதி போன்று ஏற்படுத்தி சிங்கங்கள் சுதந்திரமாக உலாவிடப்பட்டுள்ளன. அந்த இடத்தை சுற்றி வேலி
வண்டலுார் பூங்காவில்'காட்டு மாடு சபாரி'

வண்டலுார் உயிரியல் பூங்காவில், 2,400 வன உயிரினங்கள் பராமரிக்கப்படுகின்றன. இப்பூங்காவை, ஆண்டுதோறும், 20 லட்சம் பேர் கண்டு ரசிக்கின்றனர்.

மதிய உணவு கட்டி கொண்டு, குடும்பம் குடும்பமாக மக்கள் வருகை தருகின்றனர். 1,500 ஏக்கர் பரப்பு உடைய இப்பூங்காவினுள், அடர்ந்த காட்டுப்பகுதி போன்று ஏற்படுத்தி சிங்கங்கள் சுதந்திரமாக உலாவிடப்பட்டுள்ளன. அந்த இடத்தை சுற்றி வேலி அமைக்கப்பட்டுள்ளது.சற்று துாரத்தில், இதேபோல் நுாற்றுக்கணக்கான மான்களும் உலாவிடப்பட்டுள்ளன.பார்வையாளர்கள் வாகனங்களில் சென்று, சுதந்திரமாக உலாவும் சிங்கங்களையும், திரும்பும் வழியில் மான்களையும் கண்டு ரசிப்பதற்கு ஏதுவாக, 'லயன் மற்றும் மான் சபாரி' ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு பார்வையாளர்கள் மத்தியில், அமோக வரவேற்பும் கிடைத்தது. மூன்றாவதாக 'காட்டுமாடு சபாரி'யை அமைக்க, சில ஆண்டுகளுக்கு முன், பூங்கா நிர்வாகம் திட்டமிட்டது.இதற்காக, லயன் சபாரிக்கு அருகேயுள்ள காட்டுப்பகுதியை தேர்வு செய்து, திட்டங்களும் தீட்டப்பட்டன. அதன்பின், சில காரணங்களால் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில், காட்டு மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், இத்திட்டத்தை பூங்கா நிர்வாகம் மீண்டும் கையில் எடுத்துள்ளது.'லயன் சபாரி'

எப்போது?ஒவ்வொரு நாளும் பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள், லயன் சபாரி டிக்கெட் கேட்டு, அது இல்லை என்றதும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். கொரோனா தொற்று பரவலை அடுத்து மூடப்பட்ட, லயன் மற்றும் மான் சபாரிகள், இன்னும் துவங்கப்படவில்லை. விரைவில் துவங்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சரியான தருணம்!

ஒரு ஜோடி காட்டு மாடுகள் இருந்த இப்பூங்காவில், தற்போது, 40 காட்டு மாடுகள் உள்ளன. இதனால், காட்டு மாடு சபாரி அமைப்பதற்கான சரியான தருணம் ஏற்பட்டுள்ளது.மேலும், பார்வையாளர்களின் எண்ணிக்கையும், வருமானமும் அதிகரிக்கும். அதேநேரத்தில், நாட்டிலேயே காட்டு மாடுகளை அதிகம் இனப்பெருக்கம் செய்யும் பூங்கா என்ற சிறப்பும் கிடைக்கும்.



நைல் முதலைகள்

வண்டலுார் உயிரியல் பூங்காவில், கைமன், நைல், கங்கை நீர், சதுப்பு நில, உப்பு நீர் முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில், நைல் முதலையில், பெண் முதலை மட்டுமே நீண்ட நாட்களாக பராமரிக்கப்பட்டு வந்தது. அந்த முதலையின் மூக்கு உடைந்ததால், விலங்குகள் மறுவாழ்வு மையத்திற்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, மூன்று மாதத்திற்கு முன், வட நெம்மேலி முதலை பண்ணையில் இருந்து, ஒரு ஜோடி நைல் முதலைகள், வண்டலுார் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டன. அவற்றை, பழைய கூண்டிலேயே விட்டனர்.அந்த கூண்டின் உயரம் குறைவாக இருந்ததால், முதலைகள் வெளியேறிவிட்டன. ஊழியர்கள் கண்டுபிடித்து, வேறு கூண்டில் விட்டுள்ளனர். தற்போது, கூண்டின் உயரத்தை அதிகரிக்க திட்டமிட்டு, அதற்கான பணி நடந்து வருகிறது.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X