பரந்தூர் பகுதியில் நில மதிப்பு கிடு கிடு உயர்வு: விமான நிலையம் அமைவதால் கிராக்கி அதிகரிப்பு| Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

பரந்தூர் பகுதியில் நில மதிப்பு 'கிடு கிடு' உயர்வு: விமான நிலையம் அமைவதால் கிராக்கி அதிகரிப்பு

Updated : செப் 18, 2022 | Added : செப் 17, 2022 | கருத்துகள் (1) | |
காஞ்சிபுரம்: பரந்துாரில் விமான நிலையம் அமைப்பதற்கு, ௨௦௧௯ல் கருத்துரு தயார் செய்தபோதே, சுற்றியுள்ள கிராமங்களில் பலர் நிலங்களை வாங்க ஆர்வம் காட்டினர். ஆனால், விமான நிலையம் தொடர்பான பரபரப்பு அதன்பின் குறைந்ததால், நிலம் வாங்கும் ஆர்வமும் குறைந்திருந்தது. இந்நிலையில், சென்னையின் இரண்டாவது விமான நிலையம் பரந்துாரில் அமைவது உறுதியாகியுள்ள நிலையில், பரந்துாரை
தாறுமாறு,பரந்தூர், நில மதிப்பு, கிடு கிடு, உயர்வு, விமான நிலையம், கிராக்கி, அதிகரிப்பு,

காஞ்சிபுரம்: பரந்துாரில் விமான நிலையம் அமைப்பதற்கு, ௨௦௧௯ல் கருத்துரு தயார் செய்தபோதே, சுற்றியுள்ள கிராமங்களில் பலர் நிலங்களை வாங்க ஆர்வம் காட்டினர். ஆனால், விமான நிலையம் தொடர்பான பரபரப்பு அதன்பின் குறைந்ததால், நிலம் வாங்கும் ஆர்வமும் குறைந்திருந்தது. இந்நிலையில், சென்னையின் இரண்டாவது விமான நிலையம் பரந்துாரில் அமைவது உறுதியாகியுள்ள நிலையில், பரந்துாரை சுற்றியுள்ள பகுதிகளில் நிலங்களை வாங்க பலரும் ஆர்வம் காட்ட துங்கியுள்ளனர்.

ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் களத்தில் இறங்கியுள்ளன. நஞ்சையாக இருந்தால், வீட்டு மனைகளாக மாற்ற, பல துறைகளிடம் இருந்து தடையில்லா சான்று வாங்க வேண்டும். அதுவே, புஞ்சையாக இருந்தால், நகர ஊரமைப்பு துறையிடம் நேரடியாக விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். இதனால், புஞ்சை நிலங்களை வாங்க, அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.பரந்துார் மற்றும் சுங்குவார்சத்திரம் சுற்றியுள்ள கிராமங்களில், நிலங்களுக்கு அரசு வழிகாட்டி மதிப்பீடு குறைவாக உள்ளது. இவற்றை ஒப்பிட்டு, விவசாயிகள் சிலரும் தங்களுடைய நஞ்சை நிலங்களையும், வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்ய திட்டங்களை வகுத்துள்ளனர். பரந்துார் சுற்றியுள்ள பொடவூர், காரை, கூத்திரம்பாக்கம், ராஜகுளம், கூத்தவாக்கம், கரூர், தொடூர் கிராமங்களிலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தக்கோலம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மப்பேடு, பேரம்பாக்கம், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில் உள்ள பிச்சிவாக்கம், சிவபுரம் போன்ற கிராமங்களில் உள்ள நிலங்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.



விமான நிலையம் அமையவுள்ள பகுதியில் நிலம் வைத்திருக்கும் பலர், முன்கூட்டியே திட்டமிட்டு, அதிக மதிப்புடைய நிலமாக மாற்ற, மார்க்கெட் நிலவரத்துக்கு தங்களது நிலங்களை மாற்றி, மாற்றி பதிவு செய்து வருகின்றனர். ஏற்கனவே, தங்களது நிலங்களை விற்பனை செய்ய வைத்திருக்கும் நில உரிமையாளர்கள், விமான நிலைய அறிவிப்பு வருவதற்கு முன் ஒரு விலையும், அறிவிப்பு வந்த பிறகு அதிக விலையும் பேசுகின்றனர்.



latest tamil news


இதனால், சுற்றியுள்ள கிராமப்புறங்களில், நிலங்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது.விமான நிலையம் யோசனைகள் வருவதற்கு முன்பாகவே, காரை கிராமத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான மருத்துவக்கல்லுாரி அமைக்க கருத்துரு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது காரை அருகிலேயே விமான நிலையம் அமையவுள்ளதால், அங்கு மருத்துவக்கல்லுாரி அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X