புள்ளி விபரங்களுடன் கேட்டால் அண்ணாமலைக்கு பதில்: பொன்முடி

Added : செப் 17, 2022 | |
Advertisement
ஓமலுார்:''திராவிட மாடல் குறித்து அண்ணாமலை புள்ளி விபரங்களுடன் கேட்டால், பதிலளிக்க தயாராக உள்ளேன்,'' என, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.சேலத்தில் அவர் அளித்த பேட்டி:சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றை போதிப்பது தான், 'திராவிட மாடல்' ஆட்சிஎன, முதல்வர் ஸ்டாலின் தெளிவாக அறிவித்துள்ளார்.அதன்படி, அம்பேத்கர்பிறந்தநாளை சமத்துவ நாளாகவும், ஈ.வெ.ரா., பிறந்த நாளை
புள்ளி விபரங்களுடன் கேட்டால் அண்ணாமலைக்கு பதில்: பொன்முடி

ஓமலுார்:''திராவிட மாடல் குறித்து அண்ணாமலை புள்ளி விபரங்களுடன் கேட்டால், பதிலளிக்க தயாராக உள்ளேன்,'' என, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.

சேலத்தில் அவர் அளித்த பேட்டி:சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றை போதிப்பது தான், 'திராவிட மாடல்' ஆட்சிஎன, முதல்வர் ஸ்டாலின் தெளிவாக அறிவித்துள்ளார்.அதன்படி, அம்பேத்கர்பிறந்தநாளை சமத்துவ நாளாகவும், ஈ.வெ.ரா., பிறந்த நாளை சமூக நீதி நாளாகவும் அறிவித்துள்ளார்.

அண்ணாதுரை, ஈ.வெ.ரா.,கருணாநிதி ஆகியோரின் நுால்களை படித்தால், மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் அரசியல், சமுதாயம், சமூக நீதி குறித்து விழிப்புணர்வு ஏற்படும் என்பதால் தான், சபாநாயகர் அப்பாவு இவைகளை, 'பாடத்திட்டங்களாக உருவாக்க வேண்டும்' என, தெரிவித்தார். அதற்கான நடவடிக்கைகள் வரும் கல்வியாண்டிலேயே எடுக்கப்படும்.

ஆஸ்திரேலியா போன்ற, வெளிநாட்டு பல்கலையுடன், கல்வி ஒப்பந்தம் போடும் பணி நடந்து வருகிறது. இதன் மூலம் தமிழக மாணவர்கள் வெளிநாடு பல்கலைக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும். தமிழகத்திற்கு கல்வி கொள்கையை உருவாக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், 'திராவிட மாடல்' ஆட்சி நடைபெறவில்லை என, அண்ணாமலை குற்றஞ்சாட்டுகிறார். புள்ளி விபரங்களோடு அண்ணாமலை கேட்டால், நான் அதற்கு பதிலளிக்க தயாராக உள்ளேன். அவர் மிரட்டியே பழக்கப்பட்டவர்; அவர் நிறைய படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X