மத்திய அமைச்சர் முருகனுடன் நரிக்குறவர் சமூகத்தினர் சந்திப்பு

Added : செப் 17, 2022 | |
Advertisement
சென்னை:பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்ட நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள், சென்னையில், மத்திய அமைச்சர் முருகனை சந்தித்து, மத்திய அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தனர்.தமிழகத்தில் குருவிக்காரர், நரிக்குறவர் சமூகத்தினர், தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்த்து, ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என, போராடி வந்தனர். பிரதமர் நரேந்திர

சென்னை:பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்ட நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள், சென்னையில், மத்திய அமைச்சர் முருகனை சந்தித்து, மத்திய அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தனர்.

தமிழகத்தில் குருவிக்காரர், நரிக்குறவர் சமூகத்தினர், தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்த்து, ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என, போராடி வந்தனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், டில்லியில் சில தினங்களுக்கு முன் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், பழங்குடியினர்பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதனால் பழங்குடியினருக்கு கிடைக்கும்அனைத்து சலுகைகளும் நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினருக்கு கிடைக்கும்.மத்திய அமைச்சர் முருகனை, சென்னையில் உள்ள அவரின் இல்லத்தில் நரிக்குறவர் சமூக பிரதிநிதிகள் சந்தித்தனர்.அப்போது அமைச்சரிடம், தங்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி தந்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினர்.

இது குறித்து, அமைச்சர் முருகன் அறிக்கை:பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில், சமீபத்தில் பழங்குடியின பட்டியலில் இணைக்கப்பட்ட நரிக்குறவ சமூக மக்களை, என் இல்லத்திற்கு அழைத்து கலந்துரையாடினேன். இத்தகைய சிறப்பை வழங்கிய பிரதமருக்கு, தங்களின் இதயம் கனிந்த நன்றிகளை, அவர்கள் தெரிவித்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X