பூவந்தி அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா

Added : செப் 17, 2022 | |
Advertisement
முதுகுளத்தூர்--முதுகுளத்தூர் அருகே கண்டிலான் கிராமத்தில்பூவந்தி அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா நடந்தது. ஒரு மாதத்திற்கு முன்பு பேரையூரில் பிடிமண் வழங்கப்பட்டது.பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர். குதிரை எடுப்பு விழாவை முன்னிட்டு விநாயகர் கோயிலில் பக்தர்கள் அலகு வேல் குத்தி முக்கிய வீதியில் ஊர்வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மண்ணால்
பூவந்தி அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா



முதுகுளத்தூர்--முதுகுளத்தூர் அருகே கண்டிலான் கிராமத்தில்பூவந்தி அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா நடந்தது. ஒரு மாதத்திற்கு முன்பு பேரையூரில் பிடிமண் வழங்கப்பட்டது.பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர். குதிரை எடுப்பு விழாவை முன்னிட்டு விநாயகர் கோயிலில் பக்தர்கள் அலகு வேல் குத்தி முக்கிய வீதியில் ஊர்வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மண்ணால் செய்யப்பட்ட குதிரைகள் முனியன்கோயிலில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கிராமத்தில் வைக்கப்பட்டது.பின்பு கண் திறப்பு செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. குதிரை, தவளும் பிள்ளைகள் கிராமத்தின் முக்கிய விதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லபட்டு பூவந்தி அய்யனார்கோயிலில் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு நாடகம் நடந்தது. ஏற்பாடுகளை கண்டிலான் கிராம மக்கள் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X