ஆப்பிளில் பிரதமர் மோடி படம் செதுக்கிய மானாமதுரை ஓவியர்

Added : செப் 17, 2022 | |
Advertisement
மானாமதுரை--மானாமதுரை ஓவியர் கார்த்தி பிரதமர் மோடி படத்தை ஆப்பிளில் செதுக்கி அனைவரையும் கவர்ந்தார்.மானாமதுரை கன்னார் தெரு ஓவியர் கார்த்தி 35. இவர் சிறுவயதில்இருந்து ஓவியக்கலையில் ஆர்வம்உள்ளவர். பள்ளி மாணவர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஓவியம் வரைய கற்றுக் கொடுத்து வருகிறார்.இவர் பழங்கள் மற்றும் இலைகளில் அரசியல் தலைவர்கள்,விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் என
ஆப்பிளில் பிரதமர் மோடி படம் செதுக்கிய மானாமதுரை ஓவியர்

மானாமதுரை--மானாமதுரை ஓவியர் கார்த்தி பிரதமர் மோடி படத்தை ஆப்பிளில் செதுக்கி அனைவரையும் கவர்ந்தார்.

மானாமதுரை கன்னார் தெரு ஓவியர் கார்த்தி 35. இவர் சிறுவயதில்இருந்து ஓவியக்கலையில் ஆர்வம்உள்ளவர். பள்ளி மாணவர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஓவியம் வரைய கற்றுக் கொடுத்து வருகிறார்.இவர் பழங்கள் மற்றும் இலைகளில் அரசியல் தலைவர்கள்,விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் என அனைவரையும் புதுமையான முறையில் ஓவியங்களாக செதுக்குவார்.நேற்று பிரதமர் மோடியின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது படத்தை ஒரு ஆப்பிளில் அப்படியே செதுக்கி அதனை பொதுமக்கள் பார்வைக்காக வைத்துஉள்ளார்.

ஓவியர் கார்த்தி கூறுகையில், கடந்த 10 வருடங்களாக இந்தியாவைஅனைத்து துறைகளிலும் முன்னணியில் கொண்டு செல்லும் பிரதமர் மோடி புகழை பரப்பும் வகையில் அவரது பிறந்த நாளான நேற்று வாழ்த்தும் வகையில் ஆப்பிளில் அவரது படத்தை செதுக்கி வைத்துஉள்ளேன். இதனை பிரதமருக்கு அனுப்பவும் ஏற்பாடு செய்துவருகிறேன் என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X