சிவகங்கை-சென்னைக்கு அரசு பஸ்களின்றி புறக்கணிப்பு: ஆம்னி பஸ்கள் வருவாய்க்கு பச்சைக்கொடி| Dinamalar

சிவகங்கை-சென்னைக்கு அரசு பஸ்களின்றி புறக்கணிப்பு: ஆம்னி பஸ்கள் வருவாய்க்கு பச்சைக்கொடி

Updated : செப் 18, 2022 | Added : செப் 17, 2022 | கருத்துகள் (1) | |
சிவகங்கை-அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிவகங்கையில் இருந்துதினமும் மாலை சென்னைக்கு இயக்கிய அரசு பஸ்களைநிறுத்தியதோடு, ஆம்னி பஸ்களின் வருவாயை அதிகரிக்கஅரசு அதிகாரிகள் உடன்படுவதாக புகார் எழுந்துள்ளது. அரசு போக்குவரத்து கழகம் சிவகங்கை கிளையில் இருந்து தினமும் இரவு இரண்டு பஸ்கள் சென்னைக்கு இயக்கப்பட்டன. இது தவிர அரசு போக்குவரத்து கழக அதிவிரைவு பஸ்கள் இரண்டும்
சிவகங்கை-சென்னைக்கு அரசு பஸ்களின்றி புறக்கணிப்பு:   ஆம்னி பஸ்கள் வருவாய்க்கு பச்சைக்கொடி

சிவகங்கை-அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிவகங்கையில் இருந்துதினமும் மாலை சென்னைக்கு இயக்கிய அரசு பஸ்களைநிறுத்தியதோடு, ஆம்னி பஸ்களின் வருவாயை அதிகரிக்கஅரசு அதிகாரிகள் உடன்படுவதாக புகார் எழுந்துள்ளது.

அரசு போக்குவரத்து கழகம் சிவகங்கை கிளையில் இருந்து தினமும் இரவு இரண்டு பஸ்கள் சென்னைக்கு இயக்கப்பட்டன. இது தவிர அரசு போக்குவரத்து கழக அதிவிரைவு பஸ்கள் இரண்டும் இயக்கினர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, பரமக்குடியில் இருந்து சென்னை செல்லும் பஸ்கள் சிவகங்கை வழியாக வந்து செல்கின்றன.



இது தவிர தனியார் ஆம்னி பஸ்களும் இயக்கப்படுகின்றன.தினமும் இங்கிருந்து சாப்ட்வேர் இன்ஜினியர்கள், பிற தொழில்கள்,தலைமை செயலகம் செல்வோர் அடிக்கடி சென்னை செல்கின்றனர். ஆனால் இந்த பஸ்களும் போதியதாக இல்லாத சூழலில் அரசு போக்குவரத்து கழகம் சிவகங்கை கிளையில் இருந்து இயங்கி வந்த இரண்டு பஸ்களையும் எந்தவித முன் அறிவிப்பின்றி அரசு போக்குவரத்து கழகம் நிறுத்திவிட்டது. இதனால் சிவகங்கையில் இருந்து முன்பதிவு செய்து பஸ்சில் செல்ல இடமின்றி மக்கள் தவிக்கின்றனர்.



பிற ஊர்களில் இருந்தும், ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் செலுத்தி சென்னை செல்ல முடியாதவர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.சென்னைக்கு இயக்கிய அரசு பஸ்களின் எண்ணிக்கையை சத்தமில்லாமல் குறைத்துவிட்டு ஆம்னி பஸ்கள் வருவாயை பெருக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் துணை போவதாக மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.



அரசு போக்குவரத்து கழகம் சிவகங்கையில் இருந்து சென்னைக்கு தினமும் மாலை 6:00 மணியில்இருந்து 10 :00 மணி வரை 4 பஸ்களை இயக்க வேண்டும். இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்துகழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:அரசு போக்குவரத்து கழக கிளையில் இருந்து 300 கி.மீ., க்கு மேல் உள்ள பஸ் வழித்தடத்தை அரசு போக்குவரத்து (அதிவிரைவு பஸ்) கழகம் வாங்கி விட்டது. அதே நேரம் சிவகங்கையில் இருந்து சென்னைக்கு இயங்கிய 2 பஸ்களை நிறுத்திவிட்டு, அதிவிரைவு பஸ் மட்டுமே இயக்குகின்றனர், என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X