மருத்துவ கல்லூரி மாணவியிடம் போலீஸ் எனக் கூறி நகை பறிப்பு

Added : செப் 17, 2022 | |
Advertisement
பூந்தமல்லி:பூந்தமல்லியில், போலீஸ் எனக் கூறி, மருத்துவ கல்லுாரி மாணவியிடம் நான்கு சவரன் செயின் பறித்துச் சென்ற மர்ம நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், முல்லை நகரைச் சேர்ந்த, 23 வயது பெண், காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., நான்காம் ஆண்டு படிப்பை முடித்துவிட்டு, பயிற்சி பெற்று வருகிறார். உறவினர் மகன் ஜிஜோ, 21,

பூந்தமல்லி:பூந்தமல்லியில், போலீஸ் எனக் கூறி, மருத்துவ கல்லுாரி மாணவியிடம் நான்கு சவரன் செயின் பறித்துச் சென்ற மர்ம நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.
ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், முல்லை நகரைச் சேர்ந்த, 23 வயது பெண், காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., நான்காம் ஆண்டு படிப்பை முடித்துவிட்டு, பயிற்சி பெற்று வருகிறார். உறவினர் மகன் ஜிஜோ, 21, என்பவருடன், வண்டலுார்- - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், நசரத்பேட்டை அருகே நின்று பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர், தான் போலீஸ் எனக் கூறி, அங்கு நின்று பேசக் கூடாது எனக் கூறியுள்ளார். மேலும், நகைகளை கழற்றி வைக்குமாறும், இல்லையெனில் உதவி ஆய்வாளர் வந்தால் பறித்துக் கொள்வார் எனவும் கூறியுள்ளார்.
இதை நம்பி அந்த பெண், தான் அணிந்திருந்த வளையல், கம்மல், செயின் என, நான்கு சவரன் நகைகளை கழற்றி, கையில் வைத்திருந்தார்.அப்போது அந்த மர்ம நபர், நகைகளை பறித்துக் கொண்டு வாகனத்தில் தப்பினார்.இது குறித்த புகாரின்படி, மர்ம நபர்களை நசரத்பேட்டை போலீசார் தேடி வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X