குன்றக்குடி ஆதின மடத்தில் திறன் பட்டமளிப்பு விழா

Added : செப் 17, 2022 | |
Advertisement
காரைக்குடி--குன்றக்குடி திருவண்ணாமலை ஆதின மடத்தில்திறன் பட்டமளிப்பு விழா நடந்தது.குன்றக்குடி மடத்தில்2002 முதல் மத்திய அரசின் நிதியோடு, நிர்வாக குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு மக்கள் கல்வி நிலையம் எனும் ஜே.எஸ்.எஸ் திட்டம் செயல்படுகிறது. 2021-22ம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு திறன் பட்டம் வழங்க மத்திய அரசு வலியுறுத்தியது.கடந்த ஆண்டு 90 வகுப்புகளில்,
குன்றக்குடி ஆதின மடத்தில் திறன் பட்டமளிப்பு விழா



காரைக்குடி--குன்றக்குடி திருவண்ணாமலை ஆதின மடத்தில்திறன் பட்டமளிப்பு விழா நடந்தது.குன்றக்குடி மடத்தில்2002 முதல் மத்திய அரசின் நிதியோடு, நிர்வாக குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு மக்கள் கல்வி நிலையம் எனும் ஜே.எஸ்.எஸ் திட்டம் செயல்படுகிறது. 2021-22ம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு திறன் பட்டம் வழங்க மத்திய அரசு வலியுறுத்தியது.கடந்த ஆண்டு 90 வகுப்புகளில், வகுப்புக்கு20 பேர் வீதம் 15 வகையான பயிற்சி மாவட்டத்தின் 11 ஒன்றியங்களில் நடத்தப்பட்டது. இதில், ஆயிரத்து 654 பேர் பயிற்சி பெற்றனர். இதில், 200 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு பட்டமளிப்பு விழா நடந்தது.மக்கள் கல்வி நிலைய நிறுவனத் தலைவர் குன்றக்குடி பொன்னம்பலஅடிகள் தலைமை வகித்தார்.மக்கள் கல்வி நிலைய தலைவர் நாச்சிமுத்து வாழ்த்தினார். கிராம திட்டக் குழு தலைவர் பாலகிருஷ்ணன், சிக்ரி மூத்த விஞ்ஞானி ஆர்.வேத லட்சுமி, அழகப்பாபல்கலை., துறைத் தலைவர் ஜே.சுஜாதா மாலினி, செயல் அலுவலர்கனகசுந்தரி வாழ்த்தினர். முன்னதாக குன்றக்குடி மக்கள் கல்வி நிலைய இயக்குனர் விமலா வரவேற்றார். ஒன்றியகவுன்சிலர் மருது பாண்டியன், ஊராட்சி துணைத் தலைவர் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X