பெருங்களத்தூர் மேம்பால ஒருவழி பாதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு

Added : செப் 17, 2022 | |
Advertisement
பெருங்களத்துார்:பெருங்களத்துார் மேம்பால திட்டத்தில், ஜி.எஸ்.டி., சாலை மார்க்கமான ஒருவழிப்பாதை மேம்பாலத்தை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அடுத்த ஆறு மாதத்தில், முழு மேம்பாலமும் பயன்பாட்டிற்கு வரும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பெருங்களத்துார் ரயில் நிலைய சந்திப்பில் போக்குவரத்து நெரிசல்

பெருங்களத்துார்:பெருங்களத்துார் மேம்பால திட்டத்தில், ஜி.எஸ்.டி., சாலை மார்க்கமான ஒருவழிப்பாதை மேம்பாலத்தை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அடுத்த ஆறு மாதத்தில், முழு மேம்பாலமும் பயன்பாட்டிற்கு வரும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பெருங்களத்துார் ரயில் நிலைய சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், வாகனங்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.


ஒப்புதல்


இப்பிரச்னைக்கு தீர்வு காண, பெருங்களத்துார் ரயில் நிலையம் அருகில், மாநில நெடுஞ்சாலை- ரயில்வே நிர்வாகம் இணைந்து, மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக, 2000 - 01ம் ஆண்டு, 76 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின், 2020 டிச., மாதம், 234 கோடி ரூபாய்க்கு திருத்திய நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது.
பணிகள் நடந்து வந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக தொய்வு ஏற்பட்டது.பின், மீண்டும் பணிகள் வேகமெடுத்து, முதல்கட்டமாக ஜி.எஸ்.டி., சாலையில், செங்கல்பட்டு- - தாம்பரம் மார்க்கமான ஒருவழிப்பாதை மேம்பாலம் பணி முடிக்கப்பட்டது. மற்ற பணிகள் மந்தமாகவே நடந்து வருகின்றன.இந்நிலையில், பெருங்களத்துார் பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளை கருத்தில் கொண்டு, பொதுமக்களின் வசதிக்காக, பணிகள் முடிந்த ஒருவழிப்பாதை மேம்பாலத்தை பயன்பாட்டிற்கு திறக்க, அதிகாரிகள் திட்டமிட்டனர்.


கோரிக்கை


இதையடுத்து, மேம்பாலத்தில் வண்ணம் பூசி, விளக்குகள் பொருத்தப்பட்டன. நேற்று காலை, இம்மேம்பாலத்தை, முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து, பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன.
இந்த ஒருவழிப்பாதை மேம்பாலம் திறக்கப்பட்டதால், பெருங்களத்துார் பேருந்து நிலையத்தில், நாள்தோறும் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசல் ஓரளவிற்கு குறையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.மற்ற பகுதிகளிலும் பணிகளை துரிதப்படுத்தி, விரைவில் மேம்பாலத்தை முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

6 மாதத்தில் முடியும்



பெருங்களத்துார் மேம்பால திட்டத்தில், புது பெருங்களத்துார் சீனிவாசா நகர் வழியாக மேம்பாலம் இறங்கும் பகுதியில், நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடியும் நிலையை எட்டியுள்ளன. அதேபோல், நெடுங்குன்றம் மார்க்கத்தில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் துவங்கி உள்ளன.
ஜி.எஸ்.டி., சாலையின் செங்கல்பட்டு மார்க்கமாக, ஒரு சில நிலங்களை கையகப்படுத்த வேண்டியுள்ளது.இந்த மூன்று பகுதிகளிலும் நிலம் கையகப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்கப்படும். பின், பணிகளை வேகப்படுத்தி, அடுத்த ஆறு மாதத்தில் முழுமையாக முடிக்கப்பட்டு, மேம்பாலம் முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
- நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X