'மாஜி' எம்.எல்.ஏ., கடத்தல் நீதிமன்றத்தில் ஒருவர் சரண்

Added : செப் 17, 2022 | |
Advertisement
பவானிசாகர்:அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., கடத்தல் வழக்கில், ஒருவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.ஈரோடு மாவட்டம், பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ஈஸ்வரன், 46; இவரை, ஆக., 24ல் ஒரு கும்பல் காரில் கடத்தி தாக்கி, 1.50 கோடி ரூபாயை பறித்துச் சென்றதாக, புன்செய் புளியம்பட்டி போலீசில் புகார் அளித்தார். \அக்கும்பலை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன.கும்பலைச் சேர்ந்த, 40

பவானிசாகர்:அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., கடத்தல் வழக்கில், ஒருவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ஈஸ்வரன், 46; இவரை, ஆக., 24ல் ஒரு கும்பல் காரில் கடத்தி தாக்கி, 1.50 கோடி ரூபாயை பறித்துச் சென்றதாக, புன்செய் புளியம்பட்டி போலீசில் புகார் அளித்தார். \அக்கும்பலை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன.கும்பலைச் சேர்ந்த, 40 முதல், 49 வயது வரையிலான ஐவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும், அக்கரை நெகமத்தைச் சேர்ந்த மோகன், 30, என்பவர் சத்தி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அவரை கைது செய்த போலீசார், ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர். கடத்தலில் தொடர்புடைய அ.தி.மு.க., முன்னாள் நிர்வாகி சரவணனை, போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X