கேதார்நாத் கோவிலில் தங்கத்தகடு பதிக்க அர்ச்சகர்கள் கடும் எதிர்ப்பு

Updated : செப் 18, 2022 | Added : செப் 18, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
டேராடூன்-கேதார்நாத் கோவில் கருவறை சுவரில் தங்கத் தகடு பதிக்க சில அர்ச்சகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உத்தரகண்ட் மாநிலத்தின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் இமயமலையில் அமைந்துள்ளது கேதார்நாத் சிவன் கோவில். பன்னிரெண்டு ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான இக்கோவிலின் கருவறை சுவரில் தங்கத் தகடு பதிக்கும் பணிகள் துவங்கியுள்ளன.இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சில

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

டேராடூன்-கேதார்நாத் கோவில் கருவறை சுவரில் தங்கத் தகடு பதிக்க சில அர்ச்சகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.



latest tamil news



உத்தரகண்ட் மாநிலத்தின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் இமயமலையில் அமைந்துள்ளது கேதார்நாத் சிவன் கோவில். பன்னிரெண்டு ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான இக்கோவிலின் கருவறை சுவரில் தங்கத் தகடு பதிக்கும் பணிகள் துவங்கியுள்ளன.இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சில அர்ச்சகர்கள்,'தங்கத் தகடுகள் பதிப்பதற்காக, புராதன கோவிலின் கருவறை சுவரை துளையிடும் இயந்திரங்களால் சேதப்படுத்துவது, பல நுாற்றாண்டு பாரம்பரியத்துக்கு எதிரானது' என கண்டனம் தெரிவித்துள்ளனர்.


latest tamil news



இதுகுறித்து, கேதார்நாத் - பத்ரிநாத் கோவில் கமிட்டி தலைவர் அஜேந்திர அஜய் கூறியதாவது:காலத்துக்கு ஏற்ப கோவிலை அழகுபடுத்த வேண்டும். தங்கத் தகடு பதிப்பதை எதிர்ப்பது நியாயம் அல்ல. மஹாராஷ்டிர பக்தர் ஒருவர் கோவிலில் தங்கத் தகடு பதிக்க முன்வந்துள்ளார். இதற்கு மாநில அரசிடமும் முறைப்படி அனுமதி வாங்கியுள்ளோம். ஹிந்து கோவில்கள் பெருமையின் சின்னங்கள். ஹிந்து தெய்வங்களை தங்கம், வெள்ளி நகைகளால் அலங்கரிப்பது நம் பாரம்பரியம்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-செப்-202210:59:46 IST Report Abuse
ஆரூர் ரங் மதமாற்றங்களை தடுக்க அதுதான் வழி .
Rate this:
Cancel
18-செப்-202210:59:43 IST Report Abuse
ஆரூர் ரங் தங்கமுலாம், தங்கரதம் என்றெல்லாம் பணத்தை வீணாக்குவதை நிறுத்தி விட்டு ஹிந்து மதத்தின் கருத்துக்களை நாடு முழுவதும் 🙏பிரச்சாரம் செய்யலாம். (மதசார்பின்மை என்ற பெயரில் ஹிந்து மத கோவில்களில் சமய கலை, கலாசார நிகழ்ச்சிகளையும், பிரசார உரைகளையும் பல மாநிலங்களில் அறநிலையத்துறை நிறுத்திவிட்டது). மதமாற்றங்களை தடுக்க அதுதான் வழி
Rate this:
Cancel
18-செப்-202208:43:27 IST Report Abuse
எவர்கிங் பிரதமருக்கு அங்கேயும் எதிர்ப்பா? குஜ்லிவால்/பப்புவுக்கு ஜாலியோ ஜாலி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X