ரூ.5 கோடி கேட்டு கடத்தப்பட்ட திருப்பூர் சிறுவன் மீட்புகேரளா கடத்தி சென்ற நபர் துாக்கிட்டு தற்கொலை

Added : செப் 18, 2022 | |
Advertisement
திருப்பூர்:திருப்பூரில், 5 கோடி ரூபாய் கேட்டு சிறுவனை கேரளா கடத்திச் சென்ற வாலிபர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்; சிறுவன் மீட்கப்பட்டார்.திருப்பூர், வேலம்பாளையத்தைச் சேர்ந்தவர் சிவகுமார், 54; பெருமாநல்லுாரில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவன கணக்காளர். இவரது, 14 வயது மகன், 10ம் வகுப்பு படித்து வருகிறார்.கேரள மாநிலம், கொல்லத்தைச் சேர்ந்தவர் ராகேஷ், 29; சிவகுமார் பணிபுரியும்

திருப்பூர்:திருப்பூரில், 5 கோடி ரூபாய் கேட்டு சிறுவனை கேரளா கடத்திச் சென்ற வாலிபர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்; சிறுவன் மீட்கப்பட்டார்.
திருப்பூர், வேலம்பாளையத்தைச் சேர்ந்தவர் சிவகுமார், 54; பெருமாநல்லுாரில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவன கணக்காளர். இவரது, 14 வயது மகன், 10ம் வகுப்பு படித்து வருகிறார்.கேரள மாநிலம், கொல்லத்தைச் சேர்ந்தவர் ராகேஷ், 29; சிவகுமார் பணிபுரியும் நிறுவன உரிமையாளர் ராஜசேகர், இவருக்கு அறிமுகமானார். இந்நிறுவனம், 100 வீடுகளை கட்டி விற்பனை செய்ய இருந்தது.
இதற்கு ராகேஷ், தன் பங்களிப்பாக, 38.60 லட்சம் ரூபாய் கொடுத்தார்.பெருமாநல்லுார் அருகே இடம் ஒன்றை வாங்கி, வீடு கட்டும் பணி நடந்தது. இடத்தை பார்த்த ராகேஷுக்கு பிடிக்கவில்லை. ராகேஷிடம் பேசுவது, வரவு - செலவு உள்ளிட்ட அனைத்து பணிகளையும் சிவகுமார் மேற்கொண்டு வந்தார். சிவகுமாரிடம், ராகேஷ் பணத்தை திருப்பி கேட்டு வந்தார்.


முக கவசம் விலகியது


இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம், 'மங்கி குல்லா' அணிந்தபடி, இருவர் சிவகுமாரின் வீட்டுக்குள் நுழைந்தனர். கத்தியை காட்டி மிரட்டி, தம்பதியை கட்டிப் போட்டனர். மாலை, 6:00 மணியளவில் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த சிறுவனை, இருவரும் பிடித்து, கத்தாமல் இருக்க வாயை அழுத்தி மூடினர்; சிறுவன் தப்பிக்க முயன்றார்.
அவரை பிடிக்கும் போது, ஒருவரின் மங்கி குல்லா மற்றும் முக கவசம் விலகியது. அதில், அந்த நபர் ராகேஷ் என்பது தம்பதிக்கு தெரியவந்தது. அப்போது, 5 கோடி ரூபாயை கொடுத்து விட்டு, மகனை மீட்டு செல்லுமாறு கூறி, வீட்டுக்கு வெளியே தயாராக இருந்த காரில், சிறுவனை இருவரும் கடத்தினர்.சிறிது நேரம் கழித்து, அக்கம்பக்கத்தினர் உதவியோடு தம்பதி தப்பித்தனர்; வேலம்பாளையம் போலீசார் விசாரித்தனர்.


சிறுவன் மீட்பு


கமிஷனர் பிரபாகரன் உத்தரவின்படி, உதவி கமிஷனர் அனில்குமார், கொல்லத்தில் உள்ள பரவூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் அளித்து, விசாரணை நடந்து வந்தது. தனிப்படை போலீசார் கேரளா விரைந்தனர். போலீசார் வருவதை அறிந்து, நேற்று காலை ராகேஷ் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
சிறுவனை போலீசார் மீட்டு திருப்பூர் அழைத்து வந்தனர்.போலீசார் கூறுகையில், 'ராகேஷின் பணம் திருப்பி கொடுக்கப்பட்டதாக சிவகுமார் தெரிவித்தார். 'கடத்தல் விவகாரத்தில், இருமாநில போலீசார் தேடுவதை அறிந்த ராகேஷ், வீட்டில் துாக்கிட்டு இறந்தார். தற்போது, சிறுவனை மீட்டுஉள்ளோம். 'கடத்தலில் ஈடுபட்ட டிரைவர் உட்பட இருவரை தேடி வருகிறோம்' என்றனர்.

சாமர்த்தியமாக தப்பிய சிறுவன்!


சிறுவனை கடத்திச் சென்ற ராகேஷ் தன் வீட்டில் அடைத்து வைத்தார். திருப்பூர் போலீசார் தகவலின் படி, கேரளா பரவூர் போலீசார், ராகேஷ் வீட்டுக்கு சென்றனர். அவரது தந்தையை விசாரணைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். வீடு அருகே இருந்த ராகேஷ், போலீசார் வந்து சென்றதை அறிந்தார். போலீசாரிடம் சிக்கிக் கொள்வோம் என பயந்த ராகேஷ், சிறுவனை கொன்று விட்டு, தற்கொலை செய்ய முடிவு செய்தார்.நேற்று அதிகாலை, சிறுவனை அங்கிருந்த அறையில் துாக்கு மாட்டி தொங்க விட்டு சென்றார்.
சிறுவனை தொங்க விட்ட போது, சிறுவன் சாதுர்யமாக அங்கிருந்த நாற்காலி மீது காலை வைத்து, துாக்கில் இருந்து தப்பி உள்ளார்.பின், மதில்சுவர் ஏறி குதித்த சிறுவன், பொதுமக்களிடம் உதவி கேட்டார். போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர்; சிறுவன் மீட்கப்பட்டார். பின், ராகேஷ் துாக்கில் தொங்கி இறந்தது தெரியவந்தது.



முழு விசாரணை தேவை!


சிவகுமார் வேலை செய்யக்கூடிய நிறுவனம், ராகேஷ் போன்ற பலரை பங்குதாரர்களாக சேர்த்துக் கொண்டு, வீடு கட்டி தருவதாக பல லட்சம் ரூபாய் பெற்று, திருப்பிக் கொடுக்காமல், வேலையை முடிக்காமல் மோசடி செய்ததாக புகார் எழுகிறது.
கடந்த ஜூலையில், ராகேஷை போன்று, அந்நிறுவனத்தில் பங்குதாரர்களாக பணம் கட்டிய, கேரளாவைச் சேர்ந்த, 20க்கும் மேற்பட்டோர் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்து, பணத்தை திருப்பி கேட்டு, சிவகுமாரிடம் வாக்குவாதம் செய்தனர். இதுதொடர்பாக, பெருமாநல்லுார் போலீசார் விசாரித்தனர். முழுமையாக விசாரணை நடத்தினால் தான், உண்மை வெளிவரும்.





புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X