சாலை தடுப்புக்குள் புகுந்த கார் விபத்தில் தந்தை, மகள் பலி

Added : செப் 18, 2022 | |
Advertisement
வாழப்பாடி:தேசிய நெடுஞ்சாலை தடுப்பு கம்பிக்குள் கார் புகுந்ததில், தந்தை, மகள் பலியாகினர். நான்கு பேர் படுகாயமடைந்தனர்.கடலுார் மாவட்டம், நெய்வேலியைச் சேர்ந்தவர் பார்த்திபன், 62; இவர், கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் குடும்பத்துடன் தங்கி, அங்கு டயர் ரீடிரேடிங் நிறுவனம் நடத்தி வருகிறார். கடலுாரில் அவரது தாய் இறந்து விட்டார். அவரின் துக்க காரியத்துக்காக, மனைவி பத்மாவதி, 59;
சாலை தடுப்புக்குள் புகுந்த கார் விபத்தில் தந்தை, மகள் பலி

வாழப்பாடி:தேசிய நெடுஞ்சாலை தடுப்பு கம்பிக்குள் கார் புகுந்ததில், தந்தை, மகள் பலியாகினர். நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
கடலுார் மாவட்டம், நெய்வேலியைச் சேர்ந்தவர் பார்த்திபன், 62; இவர், கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் குடும்பத்துடன் தங்கி, அங்கு டயர் ரீடிரேடிங் நிறுவனம் நடத்தி வருகிறார். கடலுாரில் அவரது தாய் இறந்து விட்டார். அவரின் துக்க காரியத்துக்காக, மனைவி பத்மாவதி, 59; மகள் மகாலட்சுமி, 35; மருமகன் குங்குமராஜ், 41; பேத்திகள் அனல்யா, 9; சமிட்ஷா, 11, ஆகிய ஆறு பேருடன், நேற்று காலை பெங்களூரிலிருந்து, நெய்வேலி நோக்கி, 'மாருதி ஸ்விப்ட்' காரில் சென்று கொண்டிருந்தனர்.
காரை குங்குமராஜ் ஓட்டினார்.வாழப்பாடி அடுத்த மேட்டுப்பட்டி டோல்கேட் அருகே அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு கம்பிக்குள் புகுந்தது.நெடுஞ்சாலை போலீசார், பொதுமக்கள், 'கிரேன்' மற்றும் 'கட்டிங் மிஷின்' உதவியுடன் காருக்குள் இருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
வழியிலேயே பார்த்திபன், மகாலட்சுமி இருவரும் உயிரிழந்தனர். மற்ற நால்வரும் படுகாயமடைந்தனர்.வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X