ஆட்டோ பயணியருக்கு நிழற்குடை: கூடுவாஞ்சேரியில் திறப்பு| Dinamalar

ஆட்டோ பயணியருக்கு நிழற்குடை: கூடுவாஞ்சேரியில் திறப்பு

Added : செப் 18, 2022 | |
கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி அடுத்த காமராஜபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகில், டாக்டர் ஏ.பி.ஜே., அப்துல் கலாம் ஆட்டோ நிறுத்தம் உள்ளது.சுற்று வட்டார பகுதியில் வசிக்கும் மக்கள், அவசர தேவைகளுக்கு, இங்குள்ள ஷேர் ஆட்டோக்களை நம்பி உள்ளனர்.ஷேர் ஆட்டோவுக்காக காத்திருக்கும் பயணியர், வெயில் மற்றும் மழையில் சாலை ஓரத்தில் நின்று அவதிப்பட்டனர்.இதனால் பயணியருக்கு
ஆட்டோ பயணியருக்கு நிழற்குடை: கூடுவாஞ்சேரியில் திறப்பு

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி அடுத்த காமராஜபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகில், டாக்டர் ஏ.பி.ஜே., அப்துல் கலாம் ஆட்டோ நிறுத்தம் உள்ளது.

சுற்று வட்டார பகுதியில் வசிக்கும் மக்கள், அவசர தேவைகளுக்கு, இங்குள்ள ஷேர் ஆட்டோக்களை நம்பி உள்ளனர்.ஷேர் ஆட்டோவுக்காக காத்திருக்கும் பயணியர், வெயில் மற்றும் மழையில் சாலை ஓரத்தில் நின்று அவதிப்பட்டனர்.இதனால் பயணியருக்கு நிழற்குடை அமைத்து தர வேண்டும் என, 27வது வார்டு கவுன்சிலர் கலைசெல்வனிடம், ஆட்டோ ஓட்டுனர்கள், பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து, நந்திவரம் - கூடுவாஞ்சேரி, நெல்லிக்குப்பம் சாலை காமராஜபுரத்தில் 30 அடி நீளம் 8 அடி அகலத்தில், 85 ஆயிரம் ரூபாய் செலவில்,கவுன்சிலர் கலைச்செல்வன், நிழற்குடை அமைத்து கொடுத்துள்ளார்.இதன் திறப்பு விழா, நேற்று முன்தினம் நடந்தது. கூடுவாஞ்சேரி எமரால்டு சிட்டி லயன்ஸ் சங்க மூத்த நிர்வாகி ஆர்த்திஸ்வரி ராஜேந்திரன், நிழற்குடையை திறந்து வைத்தார். லயன் சங்க நிர்வாகிகள், ஆட்டோ பயணியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, நெல்லிக்குப்பம் சாலையில் இருந்து புற்றுகோவில், பெருமாட்டுநல்லுார், நெல்லிக்குப்பம், திருப்போரூர் போன்ற பகுதிகளுக்கு செல்ல, மாநகர பேருந்து வசதியில்லை. இதனால், இத்தடத்தில் வசிப்போர், ஷேர் ஆட்டோக்களையே நம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X