புதுடில்லி-பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க, ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று லண்டனுக்கு புறப்பட்டார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் மகாராணி இரண்டாம் எலிசபெத், 96, வயது முதிர்வு காரணமாக கடந்த 8ம் தேதி இரவு மரணம் அடைந்தார். அவரது இறுதிச் சடங்கு மற்றும் அடக்கம் செய்யும் நிகழ்வுகள் நாளை நடக்கின்றன.
இந்நிகழ்ச்சிகளில் உலக நாடுகளின் தலைவர்கள் பலர் பங்கேற்கின்றனர். நம் நாட்டில் இருந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்று, பிரிட்டன் மகாராணிக்கு அஞ்சலி செலுத்துகிறார்.இதற்காக, புதுடில்லியில் இருந்து நேற்று இரவு லண்டனுக்கு தனி விமானத்தில் புறப்பட்டார்.