புதைக்கப்பட்ட உடல் மறு பிரேத பரிசோதனை| Dinamalar

புதைக்கப்பட்ட உடல் மறு பிரேத பரிசோதனை

Added : செப் 18, 2022 | |
விக்கிரவாண்டி:விக்கிரவாண்டியில், இறந்தவரின் உடல், உயர் நீதிமன்ற உத்தரவின் படி, மறு பிரதே பரிசோதனைக்கு தோண்டி எடுக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி, உஸ்மான் நகரைச் சேர்ந்தவர் ஜாபர், 35; கார் டிரைவர். இவர், 2021, ஜூலை, 6ம் தேதி துாக்கிட்டு இறந்தார். பிரேத பரிசோதனைக்கு பின், உடல் அடக்கம் செய்யப்பட்டது.அவரது மனைவி அஷரப் நிஷா, 30; தன் கணவர் சாவில் சந்தேகம்
புதைக்கப்பட்ட உடல் மறு பிரேத பரிசோதனை

விக்கிரவாண்டி:விக்கிரவாண்டியில், இறந்தவரின் உடல், உயர் நீதிமன்ற உத்தரவின் படி, மறு பிரதே பரிசோதனைக்கு தோண்டி எடுக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி, உஸ்மான் நகரைச் சேர்ந்தவர் ஜாபர், 35; கார் டிரைவர். இவர், 2021, ஜூலை, 6ம் தேதி துாக்கிட்டு இறந்தார். பிரேத பரிசோதனைக்கு பின், உடல் அடக்கம் செய்யப்பட்டது.அவரது மனைவி அஷரப் நிஷா, 30; தன் கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், மறு பிரேத பரிசோதனை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆக., 16ல் வழக்கு தொடர்ந்தார்.


உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் உடலைத் தோண்டி, மறு பிரதே பரிசோதனை செய்ய உத்தரவிட்டது. நேற்று காலை 10:30 மணிக்கு, விக்கிரவாண்டி ஒயிட் மசூதி அருகே உள்ள கபர்ஸ்தானில் புதைக்கப்பட்டிருந்த ஜாபர் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.


சமூக நல தாசில்தார் கணேஷ், இன்ஸ்பெக்டர் வினாயக முருகன் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பேரூராட்சி பணியாளர்கள் தோண்டி எடுத்தனர்.முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி டாக்டர் கீதாஞ்சலி தலைமையில் டாக்டர் மதுவர்த்தனா குழுவினர் அந்த இடத்திலேயே மறு பிரேத பரிசோதனை செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X