கோல்கட்டா,-மேற்கு வங்கத்தில், பள்ளி ஒன்றில் நேற்று நாட்டு வெடிகுண்டு வெடித்ததில், மாணவர்கள் அலறியடித்து வெளியே ஓடினர்.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தில், டிட்டாகர் என்ற இடத்தில் உள்ள பள்ளிக் கட்டடத்தின் மேற்கூரையில் நாட்டு வெடிகுண்டு வெடித்தது. அப்போது, பள்ளியில் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. திடீரென வெடி சத்தம் கேட்டதால், மாணவர்களும், ஆசிரியர்களும் அலறியடித்து வெளியே ஓடினர். இந்த குண்டுவெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், 'பள்ளிக் கட்டட மேற்கூரையில் நாட்டு வெடிகுண்டு வெடித்துள்ளது. இது அருகில் உள்ள கட்டடத்தில் இருந்து வீசப்பட்டதா அல்லது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா என விசாரணை நடத்தப்படுகிறது' என்றனர்.