பிரதமர் மோடி பிறந்த நாள் இலவச மருத்துவ முகாம்

Added : செப் 18, 2022 | |
Advertisement
கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி கிருஷ்ணாபுரம் இரண்டாவது தெருவில், பிரதமர் நரேந்திர மோடியின் 73வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, இப்பகுதி பா.ஜ., சார்பில், இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, சுற்று வட்டாரங்களில் இருந்து 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இந்தியா விஷன் இன்ஸ்டிடியூட் கண் மருத்துவமனை குழுவினர், அவர்களுக்கு
பிரதமர் மோடி பிறந்த நாள் இலவச மருத்துவ முகாம்

கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி கிருஷ்ணாபுரம் இரண்டாவது தெருவில், பிரதமர் நரேந்திர மோடியின் 73வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, இப்பகுதி பா.ஜ., சார்பில், இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, சுற்று வட்டாரங்களில் இருந்து 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இந்தியா விஷன் இன்ஸ்டிடியூட் கண் மருத்துவமனை குழுவினர், அவர்களுக்கு பரிசோதனை செய்து, இலவசமாக கண் கண்ணாடிகளை வழங்கினர். ஏற்பாடுகளை, பா.ஜ., நகர தலைவர் முரளிதரன் செய்திருந்தார்.


ரத்த தான முகாம்



பிரதமர் மோடி பிறந்தநாள் விழாவையொட்டி, பா.ஜ., இளைஞர் அணி சார்பில், மேல்மருவத்துார் தனியார் மருத்துவமனையில், ரத்த தான முகாம் நேற்று நடந்தது.மாவட்ட பொதுச் செயலர் தினகரன், பா.ஜ., கொடியை ஏற்றி, அனைவருக்கும் இனிப்பு, அன்னதானம் வழங்கினார். கட்சியின் பல பிரிவுகளைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X