மகளின் கள்ளக்காதலனுடன் சேர்ந்து மருமகனை கொன்ற மாமியார் கைது

Updated : செப் 18, 2022 | Added : செப் 18, 2022 | |
Advertisement
நாமக்கல்:மகளின் கள்ளக்காதலனுடன் சேர்ந்து, மருமகனை கொலை செய்த மாமியார் உள்ளிட்ட, மூவரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், வெண்ணந்துார், சர்க்கார் தோப்பு பகுதியைச் சேர்ந்த டிரைவர் அருள்மணி, 30. இவருக்கும், அதேபகுதியைச் சேர்ந்த ஜோதிலட்சுமி, 26, என்பவருக்கும், சில ஆண்டுக்கு முன் திருமணம் நடந்து, இரு குழந்தைகள் உள்ளனர். அருள்மணிக்கு குடிப்பழக்கம் இருந்ததால், கணவன்,

நாமக்கல்:மகளின் கள்ளக்காதலனுடன் சேர்ந்து, மருமகனை கொலை செய்த மாமியார் உள்ளிட்ட, மூவரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், வெண்ணந்துார், சர்க்கார் தோப்பு பகுதியைச் சேர்ந்த டிரைவர் அருள்மணி, 30. இவருக்கும், அதேபகுதியைச் சேர்ந்த ஜோதிலட்சுமி, 26, என்பவருக்கும், சில ஆண்டுக்கு முன் திருமணம் நடந்து, இரு குழந்தைகள் உள்ளனர். அருள்மணிக்கு குடிப்பழக்கம் இருந்ததால், கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு, ஜோதிலட்சுமி கோபித்துக் கொண்டு, தன் தாய் ஜானகி, 49, வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது, அங்கு மணிகண்டன், 26, என்பவருடன், ஜோதிலட்சுமிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டு உள்ளது. இதையறிந்த அருள்மணி, மனைவி கண்டித்ததோடு, அடிக்கடி தன் மாமியார் வீட்டுக்கு சென்று தகராறிலும் ஈடுபட்டு வந்துள்ளார். மகளின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தடையாக இருக்கும் அவரது கணவர் அருள்மணி மீது, அவரது மாமியார் ஜானகி ஆத்திரம் அடைந்து, அவரை கொலை செய்ய திட்டமிட்டார்.

இதற்கு மகளின் கள்ளக்காதலன் மணிகண்டன் மற்றும் லோகேஸ்வரனுடன் சேர்ந்து, இரு தினங்களுக்கு முன் இரவு, மதுபோதையில் இருந்த அருள்மணியை அடித்து கொலை செய்தார். இதுகுறித்த வெண்ணந்துார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், அருள்மணியை கொலை செய்தது, அவரது மாமியார் ஜானகி, மனைவியின் கள்ளக்காதலன் மணிகண்டன், அவரது நண்பர் லோகேஸ்வரன், 21, என்று தெரிய வந்தது. மூவரையும் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X