காப்பர் ஒயர் திருடும் கும்பலால் விவசாயிகள் கவலை

Added : செப் 18, 2022 | |
Advertisement
தஞ்சாவூர்:டெல்டா மாவட்டங்களில் பம்புசெட்களில் இருந்து காப்பர் ஒயர்களை திருடும் கும்பலால் விவசாயிகள் மிகுந்த கவலையடைந்து உள்ளனர்.டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர் திருவாரூர் நாகை மயிலாடுதுறை மாவட்டங்களில் விவசாய பம்புசெட்களில் ஒயர்களை திருடுவது சமீபத்தில் அதிகமாக உள்ளது. மின்வாரியத்திற்கு சொந்தமான ஒயர்களை திருடும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதனால்

தஞ்சாவூர்:டெல்டா மாவட்டங்களில் பம்புசெட்களில் இருந்து காப்பர் ஒயர்களை திருடும் கும்பலால் விவசாயிகள் மிகுந்த கவலையடைந்து உள்ளனர்.
டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர் திருவாரூர் நாகை மயிலாடுதுறை மாவட்டங்களில் விவசாய பம்புசெட்களில் ஒயர்களை திருடுவது சமீபத்தில் அதிகமாக உள்ளது. மின்வாரியத்திற்கு சொந்தமான ஒயர்களை திருடும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதனால் விவசாயிகளும் மின்வாரிய அலுவலர்களுக்கும் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
மேலும் பம்புசெட்களுக்கு வரும் மின் கம்பிகளை அறுத்து விட்டு அதன்பின் பம்புசெட் ஒயர்களை திருடி செல்வதால் மின்வாரியத்திற்கும் விவசாயிகளுக்கு செலவாகிறது.தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பட்டுக்கோட்டை ஒரத்தநாடு கும்பகோணம் பகுதிகளில் ஒயர் திருட்டு தொடர்பாக நுாற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் போலீசில் உள்ளது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது;ஒயரை வெட்டி எடுத்துச் செல்வோருக்கு சிறிய தொகை தான் கிடைக்கும். ஆனால் விவசாயிகள் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து தான் பம்புசெட் மின் இணைப்பு தர வேண்டி உள்ளது. திருட்டை தடுக்க போலீசார் ரோந்து செல்வதை அதிகரிக்க வேண்டும். பழைய காப்பர் ஒயர்களை விலைக்கு வாங்குவோரை கண்காணிக்க வேண்டும்
ஏற்கனவே விளை பொருட்களுக்கு கட்டுபடியாகும் விலை இல்லாததால் சிரமத்தில் உள்ள விவசாயிகள் மின் ஒயர் திருட்டால் மேலும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளோம் என்றனர்.
மின்வாரிய அலுவலர் ஒருவர் கூறியதாவது; காப்பருக்காக மின்வாரியத்திற்கு சொந்தமான டிரான்ஸ்பார்மர்களை திருடும் கும்பல்களால் மிகுந்த அவதியாக உள்ளது. மின்வாரிய அலுவலர்கள் அவ்வப்போது கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகள் பம்புசெட்களிலும் ஒயர்கள் திருட்டு தொடர்பாக புகார் வருகின்றனர்.
தற்போது காப்பர் ஒயர்களுக்கு பதிலாக அலுமினியா ஒயர்களை பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுறுத்தி வருகிறோம். போலீசார் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X