வீட்டில் 92 சவரன் கொள்ளை குற்றவாளி சிக்கினார்| Dinamalar

வீட்டில் 92 சவரன் கொள்ளை குற்றவாளி சிக்கினார்

Added : செப் 18, 2022 | |
சென்னை:தாம்பரத்தை அடுத்த இரும்புலியூர் பெரியார் நகர் 10 வது தெருவைச் சேர்ந்தவர் ஜெயசீலன் 36; தாம்பரத்தில் 'இன்கம் டேக்ஸ் கன்சல்டன்சி' அலுவலகம் நடத்தி வருகிறார். தென்காசியில் வசிக்கும் தாயை பார்க்க கடந்த 9ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் சென்றார்.கடந்த 11ம் தேதி நள்ளிரவு 12:00 மணிக்கு வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
வீட்டில் 92 சவரன் கொள்ளை குற்றவாளி சிக்கினார்

சென்னை:தாம்பரத்தை அடுத்த இரும்புலியூர் பெரியார் நகர் 10 வது தெருவைச் சேர்ந்தவர் ஜெயசீலன் 36; தாம்பரத்தில் 'இன்கம் டேக்ஸ் கன்சல்டன்சி' அலுவலகம் நடத்தி வருகிறார். தென்காசியில் வசிக்கும் தாயை பார்க்க கடந்த 9ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் சென்றார்.

கடந்த 11ம் தேதி நள்ளிரவு 12:00 மணிக்கு வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 92 சவரன் நகைகள் திருடப்பட்டிருந்தன.புகாரின்படி தாம்பரம் போலீசார் வழக்கு பதிந்து கண்காணிப்பு கேமரா காட்சிகள் வாயிலாக விசாரித்ததில் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சூர்யா 23 என்பவர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.


தொடர்ந்து தாம்பரம்- திருநீர்மலை சாலையில் கடப்பேரி அருகே பதுங்கியிருந்த சூர்யாவை போலீசார் நேற்று கைது செய்து 62 சவரன் நகை இரு கார்கள் இருசக்கர வாகனங்கள் இரண்டையும் பறிமுதல் செய்தனர். மீதி நகை குறித்து விசாரிக்கின்றனர்.சூர்யா மீது பல காவல் நிலையங்களில் வாகனங்கள் திருட்டு வீடு புகுந்து திருட்டு என 12க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. திருடும் நகைகளை அவரது நண்பரிடம் கொடுத்து பணமாக்குவதும் தெரிந்துள்ளது. போலீசார் மேலும் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X