உள்ளூர் மொழியினர்g

Added : செப் 18, 2022 | |
Advertisement
மும்பை:''வங்கிகளில் வாடிக்கையாளர்களை கையாளும் பணியில் உள்ளூர் மொழியில் பேசத் தெரிந்தவர்களை நியமிக்க வேண்டும். நம் நாடு பன்முகத் தன்மை உடையது என்பதை புரிந்து செயல்பட வேண்டும்'' என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தி உள்ளார்.இந்திய வங்கிகள் சங்கத்தின் 75வது ஆண்டு கூட்டம் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடந்தது. இதில் மத்திய நிதி அமைச்சரும்
உள்ளூர் மொழியினர்g

மும்பை:''வங்கிகளில் வாடிக்கையாளர்களை கையாளும் பணியில் உள்ளூர் மொழியில் பேசத் தெரிந்தவர்களை நியமிக்க வேண்டும். நம் நாடு பன்முகத் தன்மை உடையது என்பதை புரிந்து செயல்பட வேண்டும்'' என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தி உள்ளார்.


இந்திய வங்கிகள் சங்கத்தின் 75வது ஆண்டு கூட்டம் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடந்தது. இதில் மத்திய நிதி அமைச்சரும் பா.ஜ.வைச் சேர்ந்தவருமான நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

வங்கிகள் கடன் கொடுத்து பணம் பெறும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. பொதுமக்களுக்கு அறிவுரைகளை போதிக்கும் விஷயத்துக்காக வங்கிகள் செயல்படவில்லை.வங்கிகளின் கிளைகளில் பணியாற்றும் ஊழியர்கள் உள்ளூர் மொழியில் பேசத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.
'உங்களுக்கு ஹிந்தி தெரியாதா... அப்படியானால் நீங்கள் இந்தியர்கள் இல்லை' என வாடிக்கையாளர்களிடம் ஊழியர்கள் பேசுவது எல்லாம் இனி வேண்டாம்; இதுபோன்ற நடவடிக்கைகள் வியாபாரத்துக்கு உதவாது.பல இடங்களில் இதுபோல் நடந்துள்ளதால் தான் தற்போது இதை குறிப்பிட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
கிளைகளில் ஊழியர்களை பணியமர்த்தும்போது அவர்களுக்கு உள்ளூர் மொழி பேசத் தெரியுமா என்பதை சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.குறிப்பாக வாடிக்கையாளர்களை கையாளும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் உள்ளூர் மொழி பேசத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். ஏனெனில் நம் நாடு பன்முகத் தன்மை உடையது.
உங்களுக்கு சேவை செய்யத் தயாராக உள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் நாம் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும். வங்கிகளுக்கு பணியாளர்களை தேர்வு செய்யும் நடவடிக்கை அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
சமீபகாலமாக ஹிந்தி பேசாத மாநிலங்களில் ரயில்வே ஸ்டேஷன், வங்கி போன்ற இடங்களில் மொழிப் பிரச்னை அதிகமாக உள்ளது. உள்ளூர் மொழி பேசத் தெரியாத பணியாளர்கள் வாடிக்கையாளர்களை கையாளும்போது பல இடங்களில் தகராறு ஏற்படுகிறது.இந்த தகராறுகள் பரவி தேவையற்ற பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன.
இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கிகளில் உள்ளூர் மொழி பேசுவோரை பணியமர்த்தும்படி வலியுறுத்தி உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X