அவதியோஅவதி ஆக்கிரமிப்பால் குறுகிய தெருக்களில் மக்கள்

Added : செப் 18, 2022 | |
Advertisement
வடமதுரை-திண்டுக்கல் மாவட்டத்தில் ரோட்டோர ஆக்கிரமிப்புகள் போல் குடியிருப்புகள் இருக்கும் பொதுப்பாதைகளிலும் நிலைத்த கட்டுமானங்களை கொண்டு ஆக்கிரமிக்கும் போக்கு அதிகரித்துள்ளது. இதனால் ஏராளமான தெருக்களில் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.மாவட்டத்தில் ரோட்டோரங்களில் வணிக நிறுவனங்கள் நடத்துவோர் பல இடங்களில் ரோடு விளம்பு
 அவதியோஅவதி ஆக்கிரமிப்பால் குறுகிய தெருக்களில் மக்கள்



வடமதுரை-திண்டுக்கல் மாவட்டத்தில் ரோட்டோர ஆக்கிரமிப்புகள் போல் குடியிருப்புகள் இருக்கும் பொதுப்பாதைகளிலும் நிலைத்த கட்டுமானங்களை கொண்டு ஆக்கிரமிக்கும் போக்கு அதிகரித்துள்ளது. இதனால் ஏராளமான தெருக்களில் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.மாவட்டத்தில் ரோட்டோரங்களில் வணிக நிறுவனங்கள் நடத்துவோர் பல இடங்களில் ரோடு விளம்பு , சில இடங்களில் ரோடு விளம்பை தாண்டி தார் ரோட்டிற்கு இடையூறு செய்யும் வகையில் கூரைகள் அமைத்திருப்பதை பார்க்கலாம். அரசு துறை அதிகாரிகளின் கண்காணிப்பு , கண்டிப்பான நடவடிக்கை இல்லாததால் இதுபோன்ற அவல நிலை நீடிக்கிறது. பல இடங்களில் சிக்கல் அதிகமான பின்னர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடக்கும். இதன்பின் சில மாதங்களிலே படிப்படியாக பழைய ஆக்கிரமிப்பு நிலைக்கு ஆக்கிரமிப்பாளர்கள் வந்துவிடுகின்றனர். அடுத்து பல ஆண்டுகள் பின் நடக்கும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி வரை இவர்களது ஆக்கிரமிப்பிற்கு ஆயுள் கெட்டியாக இருக்கும்.இது ஒருபுறமிருக்க தற்போது குடியிருப்புகள் இருக்கும் தெருக்களில் வீடுகள் கட்டும் பலரும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சிறிது உயரமாகவே கட்டுகின்றனர். தங்களது இடத்திற்குள் வீடுகளை அமைக்கும் இவர்கள் பொதுப்பாதையை ஆக்கிரமித்து திண்ணை, வாகனங்களை ஏற்ற, இறக்க சாய்வுத்தளம் என அமைக்கின்றனர். இதனால் தெருக்களின் இருக்கும் பொதுப்பாதையின் அகலம் குறைகிறது. சில தெருக்களில் அவசரத்திற்கு கார், ஆட்டோ, தீயணைப்பு,ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்து செல்ல முடியாமல் பரிதவிக்கும் நிலையும் ஏற்படுகிறது. பொது நலன் அடிப்படையில் அக்கறையுடன் அதிகாரிகள் செயல்பட்டு ஆக்கிரமிப்புகளை தடுத்தால் எதிர்காலத்தில் இது போன்ற ஆக்கிரமிப்பு செயல்களை ஆக்கிரமிப்பாளர்களே தவிர்த்து விடுவர்.-................-மனு கொடுத்தும் பலனில்லைரோட்டோரங்களிலாவது பல ஆண்டுகள் இடைவெளியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடக்க வாய்ப்புள்ளது. ஆனால் தெருக்களுக்குள் நிரந்தர கட்டுமானமாக உருவாகும் ஆக்கிரமிப்புகளை எந்த அரசு துறையினரும் கண்டு கொள்வதில்லை. இதனால் 20 அடி அகலப்பாதை 10 அடியாக மாறியுள்ளது. வடமதுரை அண்ணா நகரில் எனது வீடு தெருவின் கடைசி பகுதியில் உள்ளது. நாங்கள் வெளியே சென்று வர ஒரு திசையில் இருக்கும் பாதை மட்டுமே உள்ளது. முந்தைய வீடுகளின் முன்னால் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்பால் எங்கள் வீட்டிற்கு தண்ணீர், ஆம்புலன்ஸ் என எந்த வாகனத்தையும் கொண்டு வர முடியாத நிலை உள்ளது. இப்பிரச்னையால் சிமென்ட் ரோடு வசதியும் ஏற்படாமல் உள்ளது. பல ஆண்டுகளாக பேரூராட்சியில் மனு கொடுத்தும் எவ்வித பலனுமில்லாமல் கிடப்பில் உள்ளது.-பி.பாண்டியராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் (ஓய்வு), வடமதுரை.........................................-

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X