விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் அணிக்கு கோப்பை| Dinamalar

விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் அணிக்கு கோப்பை

Added : செப் 18, 2022 | |
திண்டுக்கல்,-திண்டுக்கல்லில் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடந்த டிராகன்ஸ் கோப்பைக்கான டேக் டி.டி.சி.ஏ., பர்ஸ்ட் டிவிஷன் சூப்பர் லீக்போட்டியில் விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு கோப்பை கிடைத்தது.ஆர்.வி.எஸ். கல்லுாரியில் நடந்த போட்டியில் திண்டுக்கல் விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் ஜூனியர் சி.சி. அணி 36.1 ஓவரில் 129 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. லட்சுமி நாராயணன் 39, சரவணன் 44 ரன்கள்
விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் அணிக்கு கோப்பை



திண்டுக்கல்,-திண்டுக்கல்லில் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடந்த டிராகன்ஸ் கோப்பைக்கான டேக் டி.டி.சி.ஏ., பர்ஸ்ட் டிவிஷன் சூப்பர் லீக்போட்டியில் விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு கோப்பை கிடைத்தது.ஆர்.வி.எஸ். கல்லுாரியில் நடந்த போட்டியில் திண்டுக்கல் விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் ஜூனியர் சி.சி. அணி 36.1 ஓவரில் 129 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. லட்சுமி நாராயணன் 39, சரவணன் 44 ரன்கள் எடுத்தனர். வெங்கட்ராமன் 3 விக்கெட் வீழ்த்தினார். சேசிங் செய்த கொடைக்கானல் செயின்ட் பீட்டர்ஸ் சி.சி. அணி 28.4ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கார்த்திகை குமரன் 39, முகமது யூசுப்42 ரன்கள் எடுத்தனர். என்.பி.ஆர். கல்லுாரி மைதானத்தில் நடந்த போட்டியில் நத்தம் என்.பி.ஆர். சி.சி.அணி 39.5 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்தது. சுந்திரவேல்47, அருண்குமார் 38 ரன்கள் எடுத்தனர்.பாஸ்கரன் 4 விக்கெட் வீழ்த்தினார். சேசிங் செய்த திண்டுக்கல் விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் சி.சி. அணி 24.5ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள்எடுத்து வெற்றி பெற்றது.ஆசிக்63,பாலசுப்பிரமணியன்61 ரன்கள் எடுத்தனர்.ஆர்.வி.எஸ். கல்லுாரி மைதானத்தில் நடந்த போட்டியில் நத்தம் என்.பி.ஆர். சி.சி.அணி 35.4ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்தது. சேக்பரீத் 4 விக்கெட்வீழ்த்தினார். சேசிங் செய்த கொடைக்கானல் செயின்ட் பீட்டர்ஸ் சி.சி. அணி 15.2ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பூபதிவைஷ்ணகுமார்52 ரன்கள் எடுத்தார்,கார்த்திக் 4 விக்கெட் வீழ்த்தினார்.ஆர்.வி.எஸ். கல்லுாரி மைதானத்தில் நடந்த போட்டியில் கொடைக்கானல் செயின்ட்பீட்டர்ஸ் சி.சி. அணி 38.2 ஓவரில் 10விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது.பூபதிவைஷ்ணகுமார் 36, முகமது 42 ரன்கள் எடுத்தனர். பாஸ்கரன், ஆசிக்,மாதேஷ்வரன்தலா 3 விக்கெட் வீழ்த்தினர். சேசிங் செய்த திண்டுக்கல் விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் சி.சி.அணி 35.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.ஆசிக்69,பாலசுப்பிரமணி 63 ரன்கள் எடுத்தனர்.திண்டுக்கல் விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 3 வெற்றி பெற்று 15 புள்ளிகளுடன்திண்டுக்கல் டிராகன்ஸ் கோப்பையை வென்றது. கொடைக்கானல் செயின்ட் பீட்டர்ஸ்சி.சி.அணி 2 வெற்றி பெற்று 9 புள்ளிகளுடன் 2 ம் இடம் பெற்றது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X