தொடர் திருட்டு; நகைகளுடன் 4 பேர் கைது

Added : செப் 18, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
அவிநாசி:அவிநாசி பகுதியில் கடந்த இரு மாத காலத்தில் வீட்டு கதவை உடைத்து திருட்டு சம்பவங்கள் நடந்தன. எஸ்.பி., செஷாங் சாய் உத்தரவின் பேரில், அவிநாசி டி.எஸ்.பி., பவுல்ராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி உட்பட தனிப்படை போலீசார் விசாரித்தனர்.இதுதொடர்பாக கடந்த 13ம் தேதி மதுரை மாவட்டம் காளவாசல் பகுதியை சேர்ந்த மகேந்திரன், பழங்காநத்தம், தண்டக்காரன் பட்டி பகுதியைச் சேர்ந்த சதீஷ்,
தொடர் திருட்டு; நகைகளுடன் 4 பேர் கைது

அவிநாசி:அவிநாசி பகுதியில் கடந்த இரு மாத காலத்தில் வீட்டு கதவை உடைத்து திருட்டு சம்பவங்கள் நடந்தன. எஸ்.பி., செஷாங் சாய் உத்தரவின் பேரில், அவிநாசி டி.எஸ்.பி., பவுல்ராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி உட்பட தனிப்படை போலீசார் விசாரித்தனர்.இதுதொடர்பாக கடந்த 13ம் தேதி மதுரை மாவட்டம் காளவாசல் பகுதியை சேர்ந்த மகேந்திரன், பழங்காநத்தம், தண்டக்காரன் பட்டி பகுதியைச் சேர்ந்த சதீஷ், காளவாசல் பகுதியைச் சேர்ந்த கண்ணன் (எ) ராஜ கண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இவர்களிடம் 350 கிராம் தங்கம் மற்றும் இரண்டு டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த ராஜசேகரன், 29 என்பவரை கோவை மாவட்டம் வெள்ளலுாரில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.ராஜசேகரிடமிருந்து 55 பவுன் நகை, இரண்டு டூவீலர் மற்றும் வெவ்வேறு மாவட்டங்களில் திருடப்பட்ட இரண்டு கார்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.ராஜசேகரன் மீது திண்டுக்கல், திருவண்ணாமலை, ஈரோடு, கோவை, சிவகங்கை, நாகப்பட்டினம், திருச்சி, விருதுநகர், திருப்பூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில்பல்வேறு கொள்ளை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kundalakesi - Coimbatore,இந்தியா
18-செப்-202207:37:24 IST Report Abuse
Kundalakesi Vazhakku irupavarai suthanthiramaga sutra viduvathu thaane nam naatu sattam
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X