விஸ்வேஸ்வரர் கோவிலுக்குஆதீஸ்வரர் டிரஸ்ட் மலர் சேவை

Updated : செப் 18, 2022 | Added : செப் 18, 2022 | |
Advertisement
திருப்பூர்,:ஆதீஸ்வரர் டிரஸ்ட் சார்பில், திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலுக்கு தினமும் மலர் மாலைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.டிரஸ்ட் செயலாளர் சுப்பிரமணியன் கூறியதாவது:டிரஸ்ட் தலைவர் மற்றும் செயலாளர் பங்களிப்புடன், கடந்த ஆறு ஆண்டுகளாக, விஸ்வேஸ்வர சுவாமி கோவிலுக்கு, தினமும், 65 மலர் மாலைகள் இலவசமாக கட்டி கொடுக்கப்படுகிறது. கோவில் நிர்வாகம் சார்பில்,

திருப்பூர்,:ஆதீஸ்வரர் டிரஸ்ட் சார்பில், திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலுக்கு தினமும் மலர் மாலைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.டிரஸ்ட் செயலாளர் சுப்பிரமணியன் கூறியதாவது:டிரஸ்ட் தலைவர் மற்றும் செயலாளர் பங்களிப்புடன், கடந்த ஆறு ஆண்டுகளாக, விஸ்வேஸ்வர சுவாமி கோவிலுக்கு, தினமும், 65 மலர் மாலைகள் இலவசமாக கட்டி கொடுக்கப்படுகிறது. கோவில் நிர்வாகம் சார்பில், பட்டிவிநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள, 'ெஷட்' வழங்கப்பட்டது.ஒவ்வொரு மாதமும், ஒரு லட்சம் ரூபாய் வரை மதிப்பிலான மலர் மாலைகளை நன்கொடையாக வழங்கி வருகிறோம்.சிலரது வற்புறுத்தலுக்காக, கோவிலுக்கு நேர் எதிரே, காலணி ஸ்டாண்ட் அமைக்கும் கோரிக்கையை அதிகாரிகள் ஏற்கக்கூடாது; பக்கவாட்டு பகுதியில், காலணி ஸ்டாண்ட் அமைக்க திட்டமிடலாம். மலர் மாலை கட்டி கொடுக்கும் நித்ய சேவையை தொடர வசதியாக, தகுந்த கட்டடத்தை ஒதுக்கி கொடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X