மின் கட்டணத்துக்கு எதிரான போராட்டம்ஒன்றிணையும் தொழில் துறைகள்

Added : செப் 18, 2022 | |
Advertisement
பல்லடம்:பல்லடத்தில், வரும் 20ம் தேதி மின் கட்டண உயர்வை கண்டித்து நடக்கவுள்ள உண்ணாவிரத போராட்டத்தில், ஒட்டுமொத்த தொழில்துறையினரும் இணைந்து போராட திட்டமிட்டுள்ளனர்.உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தொழில் துறையினர் பலரும் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். முன்னதாக, கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கி நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள்

பல்லடம்:பல்லடத்தில், வரும் 20ம் தேதி மின் கட்டண உயர்வை கண்டித்து நடக்கவுள்ள உண்ணாவிரத போராட்டத்தில், ஒட்டுமொத்த தொழில்துறையினரும் இணைந்து போராட திட்டமிட்டுள்ளனர்.உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தொழில் துறையினர் பலரும் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். முன்னதாக, கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கி நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர்.தொடர்ந்து, பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் நாடா இல்லா தறி உரிமையாளர்கள் சங்கம் (சிஸ்வா) ஆகியவை உற்பத்தி நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன. இதனால், ஒட்டுமொத்த காடா உற்பத்தி துறையும், மின் கட்டணம் உயர்வுக்கு எதிராக குரல் கொடுக்க துவங்கியுள்ளன.தென்னிந்திய நாடா இல்லா தறி உரிமையாளர்கள் (சிஸ்வா) சங்கத்தினர், வரும் 20ம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்துடன், உண்ணாவிரத போராட்டத்தையும் நடத்த தீர்மானித்துள்ளனர். இப்போராட்டத்தில், பெண்கள், தொழில் துறையினர் பலரையும் பங்கேற்கச் செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.போராட்டத்தில், விசைத்தறி, நாடா இல்லா தறி, சுல்ஜர், ஏர்ஜெட், ஜவுளி உற்பத்தியாளர்கள், சைசிங் உள்ளிட்ட ஜவுளித்துறையினர் மட்டுமன்றி, மின் கட்டணத்தால் பாதிக்கப்படும் இதர தொழில் நிறுவனங்களுடன் இணைந்து போராடவும் திட்டமிடப்பட்டுள்ளது.இதன் காரணமாக, வரும் 20ம் தேதி அன்று நடக்கவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில், மின் கட்டணத்தால் பாதிக்கப்படும் ஒட்டுமொத்த தொழில்துறையும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X