தேனியில் 5 கி.மீ., சென்டர் மீடியன் அமைக்கும் பணி விறுவிறுப்பு

Added : செப் 18, 2022 | |
Advertisement
தேனி,-தேனியில் போக்குவரத்தை முறைப்படுத்தி விபத்துக்களை தவிர்க்க 5 கி.மீ.துாரம் சென்டர் மீடியன் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.தேனி மாவட்ட தலைநகராக இருந்தாலும் பல இடங்களில் ரோடு குறுகலாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல், வாகன விபத்துக்கள் அதிகரிக்கிறது. பள்ளி, கல்லுாரி நேரங்களிலும், மதுரை-தேனி ரயில் தேனி வந்து செல்லும் போதும் அதிக நெரிசல் ஏற்படுகிறது.
 தேனியில் 5 கி.மீ., சென்டர் மீடியன் அமைக்கும் பணி  விறுவிறுப்பு

தேனி,-தேனியில் போக்குவரத்தை முறைப்படுத்தி விபத்துக்களை தவிர்க்க 5 கி.மீ.துாரம் சென்டர் மீடியன் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தேனி மாவட்ட தலைநகராக இருந்தாலும் பல இடங்களில் ரோடு குறுகலாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல், வாகன விபத்துக்கள் அதிகரிக்கிறது. பள்ளி, கல்லுாரி நேரங்களிலும், மதுரை-தேனி ரயில் தேனி வந்து செல்லும் போதும் அதிக நெரிசல் ஏற்படுகிறது. இப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூ.14.5 கோடியில் தேனியில் ரோடு விரிவாக்க பணிகள் நடக்கிறது.

இதில் பெரியகுளம் பைபாஸ் ரோடு மதுராபுரியில் முதல் சுக்குவாடன்பட்டி சாலை பிள்ளையார் கோயில் வரை 3.4 கி.மீ. துாரம் ரோட்டில் இரு பகுதியிலும் தலா 2.50 மீ. அகலப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு 4 சிறுபாலங்கள் அகலப்படுத்தியும் 60 மின் கம்பங்கள், 10 மின் டிரான்ஸ்பார்மர்கள் இடையூறு இன்றி இடமாற்றியுள்ளனர். இதனால் 10 மீ., ரோடு 15.60 மீட்டராக பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இரு வழிச்சாலை நான்கு வழிச்சாலையாக மாறியுள்ளது. விபத்துக்களை தவிர்க்க மதுராபுரி விலக்கு முதல் சாலை பிள்ளையார் கோயில் வரை 3.4 கி.மீ.துாரத்திற்கு சிமென்ட் கான்கீரிட் சென்டர் மீடியன் அமைக்கும் பணி விறுவிறுப்படைந்துள்ளது. ரோடு பணிகளின்தரம் குறித்து கோட்ட பொறியாளர் ரமேஷ் ஆய்வு செய்தார்.ஏற்கனவே கடந்த ஆண்டுகளில் சாலை பிள்ளையாயார் கோயில் முதல் தேனி நேருசிலை வரை 3 கி.மீ.துாரத்திற்கு சென்டர் மீடியன் உள்ளது. மதுரை ரோடு அரண்மனைபுதுார் விலக்கு முதல் நேருசிலை வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கி.மீ.துாரம் சென்டர் மீடியன் உள்ளது.

தேசிய நெடுஞ்சாலையில் தற்போது கம்பம் ரோடு கொட்டக்குடி பாலம் முதல் போடி விலக்கு வரை2 கி.மீ., துார சென்டர் மீடியன் அமைக்கும் பணி நடக்கிறது. நகரில் முக்கிய ரோடுகள் சென்டர் மீடியன்கள் வசதி செய்வதால் விபத்துக்களும்,நெரிசலும் குறையும்.உதவி கோட்ட பொறியாளர் ராமமூர்த்தி கூறுகையில்,'' ரோடு விரிவாக்க பணி 65 சதவீதம் முடிந்துள்ளது. ரோட்டில் இரு லேயர் ஜல்லி உருட்டி, தார் ஜிப்சமிட்டு ரோடு பணி 2 மாதத்தில் நிறைவு பெறும்,' என்றார்


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X