இட ஒதுக்கீடு கல்வி கட்டணம்தனியார் பள்ளிகள் கோரிக்கை

Added : செப் 18, 2022 | |
Advertisement
ஈரோடு:தனியார் பள்ளி மற்றும் கல்லுாரிகள் சங்க கூட்டமைப்பின், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தாளாளர்கள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது.தனியார் பள்ளிகளின் உடமைகளின் பாதுகாப்பு குறித்து உரிய அரசாணை தமிழக அரசால் வெளியிட வேண்டும்.மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதி கல்வி நிறுவன கட்டடங்களுக்கு, 75 சதவீதம் உயர்த்தப்பட்ட சொத்து வரியை

ஈரோடு:தனியார் பள்ளி மற்றும் கல்லுாரிகள் சங்க கூட்டமைப்பின், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தாளாளர்கள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது.தனியார் பள்ளிகளின் உடமைகளின் பாதுகாப்பு குறித்து உரிய அரசாணை தமிழக அரசால் வெளியிட வேண்டும்.மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதி கல்வி நிறுவன கட்டடங்களுக்கு, 75 சதவீதம் உயர்த்தப்பட்ட சொத்து வரியை குறைந்தபட்சமாக நிர்ணயிக்க முதல்வரிடம் வலியுறுத்த வேண்டும். தனியார் பள்ளி கட்டண நிர்ணயம் குழுவில் தாளாளர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்.அரசின், 25 சதவீத இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கட்டணங்களை, எவ்வித தாமதமுமின்றி அந்தந்த கல்வி ஆண்டுக்குள் உடனுக்குடன் வழங்க வேண்டும். குறைந்தபட்ச, 50 சதவீதம் கட்டணத்தை உயர்த்தி வழங்கவேண்டும்.புதிய பாட திட்டங்களுக்கான அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு வழங்கப்படுவது போல், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X