காரமடை அரங்கநாதர் கோவிலில்புரட்டாசி சனிக்கிழமை விழா

Added : செப் 18, 2022 | |
Advertisement
மேட்டுப்பாளையம்:கோவை காரமடை அரங்கநாதர் கோவிலில், நேற்று புரட்டாசி சனிக்கிழமை விழா துவங்கியது. கோவை மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில். இங்கு புரட்டாசி சனிக்கிழமை விழாவும், மாசி மக தேர்த்திருவிழாவும் வெகு விமரிசையாக நடைபெறுகின்றன. புரட்டாசி சனிக்கிழமைகளில், பக்தர்கள் விரதம் இருந்து, தாசர்களுக்கு படையலிட்டு, பெருமாளை வழிபட்டு
காரமடை அரங்கநாதர் கோவிலில்புரட்டாசி சனிக்கிழமை விழா

மேட்டுப்பாளையம்:கோவை காரமடை அரங்கநாதர் கோவிலில், நேற்று புரட்டாசி சனிக்கிழமை விழா துவங்கியது. கோவை மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில். இங்கு புரட்டாசி சனிக்கிழமை விழாவும், மாசி மக தேர்த்திருவிழாவும் வெகு விமரிசையாக நடைபெறுகின்றன. புரட்டாசி சனிக்கிழமைகளில், பக்தர்கள் விரதம் இருந்து, தாசர்களுக்கு படையலிட்டு, பெருமாளை வழிபட்டு செல்வது வழக்கம். இந்த ஆண்டு புரட்டாசி மாதம் இன்று (18ம் தேதி) பிறக்கிறது. ஆனால், நேற்றைய தினமே (17ம் தேதி) புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையாக கோவில் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு நடை திறந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள், வெண்பட்டு குடை சூழ, வெள்ளி சிம்மாசனத்தில் கோவிலில் வலம் வந்து, திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோவில் முன் தாசர்கள் வரிசையாக அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு பக்தர்கள் காய்கறிகள், அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் வழங்கி வழிபட்டனர். தாசர்கள் கொடுத்த சிறிதளவு அரிசி, பருப்பு, காய்கறிகளை பெற்றுச் சென்று, அதை பொங்கலிட்டு விரதம் முடித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X