‛காங்கிரஸ் ‛பியூஸ் போன பல்பு: மத்திய இணை அமைச்சர் கிண்டல்| Dinamalar

‛காங்கிரஸ் ‛பியூஸ்' போன பல்பு': மத்திய இணை அமைச்சர் கிண்டல்

Updated : செப் 18, 2022 | Added : செப் 18, 2022 | கருத்துகள் (3) | |
ராமநாதபுரம்-''காங்., ஏற்கனவே, 'பியூஸ்' போன பல்பு. அதனால் நாட்டிற்கு மீண்டும் வெளிச்சத்தை தர முடியாது,'' என, மத்திய சிறுபான்மையினர் நலத்துறை இணை அமைச்சர் ஜான் பெர்லா குற்றஞ்சாட்டினார். பிரதமர் மோடியின், 72வது பிறந்த நாளையொட்டி நேற்று ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், ரத்ததான முகாமை துவக்கி வைத்த அவர் கூறியதாவது:மத்திய அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ராமநாதபுரம்-''காங்., ஏற்கனவே, 'பியூஸ்' போன பல்பு. அதனால் நாட்டிற்கு மீண்டும் வெளிச்சத்தை தர முடியாது,'' என, மத்திய சிறுபான்மையினர் நலத்துறை இணை அமைச்சர் ஜான் பெர்லா குற்றஞ்சாட்டினார்.



latest tamil news



பிரதமர் மோடியின், 72வது பிறந்த நாளையொட்டி நேற்று ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், ரத்ததான முகாமை துவக்கி வைத்த அவர் கூறியதாவது:மத்திய அரசு சிறுபான்மையினர் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் அக்கறையுடன் செயல்படுகிறது. சிறுபான்மை மக்களுக்கான விளையாட்டு திடல், சமூக நலக்கூடங்கள், கல்வி, மருத்துவ வசதிகள், சுயதொழில், வியாபார கடன்கள் என, வாழ்க்கை மேம்பாட்டிற்காக மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அந்த திட்டங்கள் குறித்து வீடுகள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் தி.மு.க., அரசு சிறுபான்மையினரை வாக்கு வங்கியாக பயன்படுத்துகிறதே தவிர, அவர்களுக்கான இந்த திட்டங்களை சரிவர செயல்படுத்தவில்லை.இலங்கை அரசால் மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதற்கும் நிரந்தர தீர்வு காணப்படும்.


latest tamil news



கடந்த காங்., ஆட்சியுடன் ஒப்பிடுகையில், தற்போது மீனவர்கள் பாதுகாப்புடன் உள்ளனர்.வரும், 2024 லோக்சபா தேர்தலில் பா.ஜ., வெற்றி பெறுவதோடு, தொடர்ந்து தமிழகத்திலும் ஆட்சியை கைப்பற்றும். ராகுலின், 150 நாள் நடை பயணம் பயனளிக்காது. கடந்த 75 ஆண்டுகளில் சாதிக்காததை இப்போது சாதிக்க முடியுமா? காங்., ஏற்கனவே, 'பியூஸ்' போன பல்பு. அதனால் நாட்டிற்கு மீண்டும் வெளிச்சத்தை தர முடியாது.இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X