கிராமத்தை நோக்கியே அடுத்த பயணம்!கோவையில் கமல் பேச்சு

Added : செப் 18, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
கோவை:''விவசாயியை காக்க, கிராமத்தை நோக்கியே மக்கள் நீதி மய்யத்தின் அடுத்த பயணம்,'' என, கட்சி தலைவர் கமல் பேசினார்.கோவை, குனியமுத்துாரில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், பல்வேறு துறைகளில் சாதிக்கும் பெண்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. 20 பேருக்கு சாதனையாளர் விருதை, கமல் வழங்கினார்.தொடர்ந்து அவர் பேசியதாவது:மாற்றத்தை ஏற்படுத்த வயது தேவையில்லை. எண்ணத்தில்
கிராமத்தை நோக்கியே அடுத்த பயணம்!கோவையில் கமல் பேச்சு

கோவை:''விவசாயியை காக்க, கிராமத்தை நோக்கியே மக்கள் நீதி மய்யத்தின் அடுத்த பயணம்,'' என, கட்சி தலைவர் கமல் பேசினார்.கோவை, குனியமுத்துாரில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், பல்வேறு துறைகளில் சாதிக்கும் பெண்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. 20 பேருக்கு சாதனையாளர் விருதை, கமல் வழங்கினார்.தொடர்ந்து அவர் பேசியதாவது:மாற்றத்தை ஏற்படுத்த வயது தேவையில்லை. எண்ணத்தில் தீவிரம் வேண்டும். நாம் நம் பணியை செய்ய தலைமை பொறுப்பு தேவையில்லை. இவ்வுலகில் மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் சாமானியர் தான்.மாற்றம் நம்மிலிருந்து துவங்க வேண்டும். இங்கு கூடியிருக்கும் அனைவருமே மாற்றத்தின் விதையாக மாற முடியும். வீரத்தின் உச்சகட்டம் அஹிம்சை தான்.விவசாயிகளை சாகடித்து விட்டு நாம் சாப்பிட முடியுமா? விவசாயத்தை கற்றுக் கொள்ள வேண்டும். கிராமத்தை மேம்படுத்த, கிராமத்தை நோக்கியே மக்கள் நீதி மய்யத்தின் அடுத்த பயணம் இருக்கும். நான் காசு கேட்கவில்லை. ஓட்டுக்கு காசு வாங்காமல் மக்கள் நீதி மய்யத்துக்கு வந்து ஓட்டு போடுங்கள். ஊழல் நோய் ஒழிய, நியாயம், நேர்மை வெல்ல வாருங்கள்.இவ்வாறு, அவர் பேசினார்.கோவை மேற்கு மாவட்ட செயலாளர் சிவா, மாவட்ட பொருளாளர் மோகன் ராஜ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-செப்-202213:22:39 IST Report Abuse
எவர்கிங் சரிதான், கிராமத்தில் ரவிக்கை போடமாட்டாங்க/ தெரியாது - அங்கே உங்க லிப் லாக் கலாச்சாரம் கொடிகட்டி பறக்குமே என்ற எண்ணமோ?!
Rate this:
Cancel
18-செப்-202209:48:49 IST Report Abuse
Radhakrishnan பத்ம விருது பெற்ற, 100 வயது கடந்து விட்ட இந்தப் பாட்டியை அனைத்துக் கட்சித் தலைவர்களும் சந்தித்து மரியாதை செய்துள்ளனர். பிரதமர் இவர் காலில் விழுந்து ஆசி பெற்றுச் சென்றார். ஆனால் ஆண்டவர் மட்டும் தான் தன் படம் உள்ள பேட்ஜை பாட்டிக்கு அணிவித்து அவரோடு புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். விளம்பரம் முக்கியம் அமைச்சரே 😂
Rate this:
Cancel
18-செப்-202207:41:59 IST Report Abuse
அப்புசாமி கிராமத்து கெழவிகளை வெச்சு பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்குங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X