தி.மு.க.,வுக்கு தாவுகிறாரா அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,?முதல்வர் ஸ்டாலினை பாராட்டியதால் பரபரப்பு| Dinamalar

தி.மு.க.,வுக்கு தாவுகிறாரா அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,?முதல்வர் ஸ்டாலினை பாராட்டியதால் பரபரப்பு

Added : செப் 18, 2022 | கருத்துகள் (1) | |
கோவை:கோவை அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கந்தசாமி, தி.மு.க., அரசை பாராட்டி பேசியிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பொது சுகாதாரத்துறை சார்பில், கோவை மாவட்டம், சூலுார் தொகுதி பள்ளபாளையத்தில், 'வருமுன் காப்போம்' முகாம் நேற்று நடந்தது. அதில், பங்கேற்ற அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கந்தசாமி பேசியதாவது:முன்னாள் முதல்வர் ஜெ., காலத்திலும், கருணாநிதி காலத்திலும், தற்போதைய முதல்வர் ஆட்சியிலும்
தி.மு.க.,வுக்கு தாவுகிறாரா அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,?முதல்வர் ஸ்டாலினை பாராட்டியதால் பரபரப்பு

கோவை:கோவை அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கந்தசாமி, தி.மு.க., அரசை பாராட்டி பேசியிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பொது சுகாதாரத்துறை சார்பில், கோவை மாவட்டம், சூலுார் தொகுதி பள்ளபாளையத்தில், 'வருமுன் காப்போம்' முகாம் நேற்று நடந்தது. அதில், பங்கேற்ற அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கந்தசாமி பேசியதாவது:முன்னாள் முதல்வர் ஜெ., காலத்திலும், கருணாநிதி காலத்திலும், தற்போதைய முதல்வர் ஆட்சியிலும் மருத்துவத்துறைக்கு தனியாக கவனம் செலுத்தி, மக்களை காப்பாற்றுவதில் சீரிய சிந்தனையோடு, தமிழக அரசு செயலாற்றிக் கொண்டிருக்கிறது. மக்களின் இருப்பிடத்துக்கு நேரடியாக வந்து, சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.பள்ளபாளையம் பேரூராட்சி தலைவர் (தி.மு.க.), என்ன திட்டம் கொண்டு வந்தாலும், எம்.எல்.ஏ.,வான நான், உறுதுணையாக இருப்பேன். அவரும் மக்கள் பிரதிநிதி; நானும் மக்கள் பிரதிநிதி. சின்னங்கள் வேறாக இருந்தாலும், எங்களது எண்ணங்கள் தொகுதி வளர்ச்சிக்காக, மக்களுக்காக இருக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.


'அ.தி.மு.க., ரத்தம் ஓடுது'


தி.மு.க., அரசை பாராட்டி பேசியிருப்பது தொடர்பாக, எம்.எல்.ஏ., கந்தசாமியிடம் கேட்டபோது, ''ஒவ்வொரு அரசும் மருத்துவத்துறைக்கு அளித்து வரும் முக்கியத்துவத்தை பற்றி பேசினேன்,'' என்றார்.'தி.மு.க.,வுக்கு தாவப்போவதாக சொல்கிறார்களே' என கேட்டதற்கு, ''1972ல் இருந்து அ.தி.மு.க.,வில் இருக்கிறேன். அ.தி.மு.க., ரத்தமே ஓடுகிறது. அ.தி.மு.க.,வுக்கு துரோகம் செய்தால், சந்ததியே விளங்காது,'' என்றார்.'ஜெ., கருணாநிதி, ஸ்டாலின் ஆட்சியை பற்றி பேசிய நீங்கள், முந்தைய முதல்வர் பழனிசாமி ஆட்சியை பற்றி பேசவில்லையே' என, கேட்டதற்கு, ''அப்படியா, பேசியிருப்பேனே. நன்றாக கேளுங்கள்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X