கோவில் நிர்வாகியை தாக்கிய தந்தை, மகன் மீது வழக்குப் பதிவு

Added : செப் 18, 2022 | |
Advertisement
திருபுவனை : மதகடிப்பட்டில் கோவில் நிர்வாகி மீது தாக்குதல் நடத்திய தந்தை, மகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருபுவனை அருகே உள்ள மதகடிப்பட்டு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் விஜயசந்திரன் 40; கோவில் நிர்வாகி. இவருக்கும் முன்னாள் நிர்வாகி மணியன் மகன் பூபாலனுக்கும் முன் விரோதம் உள்ளது.நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் முத்து


திருபுவனை : மதகடிப்பட்டில் கோவில் நிர்வாகி மீது தாக்குதல் நடத்திய தந்தை, மகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருபுவனை அருகே உள்ள மதகடிப்பட்டு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் விஜயசந்திரன் 40; கோவில் நிர்வாகி. இவருக்கும் முன்னாள் நிர்வாகி மணியன் மகன் பூபாலனுக்கும் முன் விரோதம் உள்ளது.நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் முத்து மாரியம்மன் கோவிலில் மண்டல அபிஷேகம் முடிந்து விஜயசந்திரன் பக்தர்களுக்கு உணவு வழங்கினார்.

அப்போது அங்கு வந்த பூபாலன் மற்றும் அவரது மகன் மணிஷர்மா ஆகியோர் விஜயசந்திரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.வாக்குவாதம் முற்றிய நிலையில், தந்தை, மகன் இருவரும் விஜயசந்திரனை உருட்டுக் கட்டையால் இடது காலில் தாக்கி மிரட்டல் விடுத்துவிட்டு, தப்பிச் சென்றனர்.இது குறித்து விஜயசந்திரன் கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குமாரவேல் வழக்குப் பதிந்துவிசாரணை நடத்தி வருகிறார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X