திருநங்கைகள் குறை தீர்க்கும் கூட்டம்

Added : செப் 18, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு வழங்கும் அனைத்து திட்டங்களையும் திருநங்கைகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி
திருநங்கைகள் குறை  தீர்க்கும் கூட்டம்



கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு வழங்கும் அனைத்து திட்டங்களையும் திருநங்கைகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி பேசுகையில், 'மாவட்டத்தில் உள்ள 37 மூத்த திருநங்கைகளுக்கு முதியோர் ஓய்வூதியத்திற்கான ஆணை, தையல் இயந்திரம், தொழில் முனைவோரை ஊக்குவிக்க 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி. 38 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 60 திருநங்கைளுக்கு ரேஷன் கார்டு, 2 பேருக்கு 2.10 லட்சம் ரூபாய் மதிப்பில் பசுமை வீடுகள், 62 பேருக்கு அடையாள அட்டை, 4 பேருக்கு முதல்வர் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்பட்டுள்ளது.அரசின் மூலம் வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் கிடைத்திடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார்.தொடர்ந்து, திருநங்கைகளிடம் 55 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.கூட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன், தொழில் மைய பொது மேலாளர் சந்திரசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X