சாலை விபத்தில் செவிலியர் பலி: ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை

Added : செப் 18, 2022 | |
Advertisement
திருக்கனுார் : கூனிச்சம்பட்டில் சாலை விபத்தில் செவிலியர் இறந்ததை தொடர்ந்து, சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.கூனிச்சம்பட்டு திடீர் நகரைச் சேர்ந்தவர் குமார் மகள் சிவப்பிரியா, 28; பொம்பூர் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார்.நேற்று முன்தினம் வேலைக்கு சென்றபோது, கூனிச்சம்பட்டு பாரதியார் கிராம வங்கி அருகே,



திருக்கனுார் : கூனிச்சம்பட்டில் சாலை விபத்தில் செவிலியர் இறந்ததை தொடர்ந்து, சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.கூனிச்சம்பட்டு திடீர் நகரைச் சேர்ந்தவர் குமார் மகள் சிவப்பிரியா, 28; பொம்பூர் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார்.நேற்று முன்தினம் வேலைக்கு சென்றபோது, கூனிச்சம்பட்டு பாரதியார் கிராம வங்கி அருகே, ஆக்கிரமிப்பால் குறுகலான சாலையில் பின்னால் வந்த டிராக்டர் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார்.பலமுறை புகார் அளித்தும், இச்சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றாத பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியமே செவிலியர் இறப்புக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றசாட்டினர்.

இந்நிலையில், திருக்கனுார், கே.ஆர்.பாளையம் சாலை சந்திப்பில் இருந்து மணலிப்பட்டு வரை கூனிச்சம்பட்டு சாலையோர ஆக்கிரமிப்புகள் நாளை (19ம் தேதி) காலை 9:30 மணிக்கு அகற்றப்படும் என பொதுப்பணி துறை அறிவித்து உள்ளது.கூனிச்சம்பட்டு சாலையோர வீடுகள் மற்றும் கடை உரிமையாளர்களிடம் ஆக்கிரமிப்புகளை தாங்களாக அகற்றிக் கொள்ள வேண்டுமென பொதுப்பணித் துறை ஊழியர்கள் மூலம் நேற்று நோட்டீஸ் வழங்கப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X