காங்., கட்சி பலம் பெற்றுள்ளது ஹிபி ஈடன் எம்.பி., பேச்சு

Added : செப் 18, 2022 | |
Advertisement
புதுச்சேரி : புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரதேச காங்., கமிட்டி உறுப்பினர்கள் மூலம் மீண்டும் காங்., கட்சி அனைத்து நிலைகளிலும் பலம் பெற்றுள்ளது என ஹிபி ஈடன் எம்.பி., பேசினார்.புதுச்சேரி காங்., அலுவலகத்தில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட பிரதேச காங்., கமிட்டி உறுப்பினர்கள் (மாநில பொதுக் குழு உறுப்பினர்கள்) முதல் கூட்டம் நேற்று நடந்தது.மாநில காங்., தலைவர் சுப்பிரமணியன்
காங்., கட்சி பலம் பெற்றுள்ளது  ஹிபி ஈடன் எம்.பி., பேச்சு



புதுச்சேரி : புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரதேச காங்., கமிட்டி உறுப்பினர்கள் மூலம் மீண்டும் காங்., கட்சி அனைத்து நிலைகளிலும் பலம் பெற்றுள்ளது என ஹிபி ஈடன் எம்.பி., பேசினார்.புதுச்சேரி காங்., அலுவலகத்தில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட பிரதேச காங்., கமிட்டி உறுப்பினர்கள் (மாநில பொதுக் குழு உறுப்பினர்கள்) முதல் கூட்டம் நேற்று நடந்தது.மாநில காங்., தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

முன்னாள் முதல்வர் நாராயணசாமி முன்னிலை வகித்தார்.மாநில காங்., கட்சியின் தேர்தல் பார்வையாளர் ஹிபி ஈடன் எம்.பி., பேசும்போது, புதுச்சேரியில் கடந்த சில ஆண்டுகளாக காங்., கட்சிக்கு சிறிது பின்னடைவு இருந்தது. புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரதேச காங்., கமிட்டி உறுப்பினர்கள் மூலம் மீண்டும் காங்., கட்சி அனைத்து நிலைகளிலும் பலம் பெற்றுள்ளது' என குறிப்பிட்டார்.

புதுச்சேரி பிராந்தியத்தை பொறுத்தவரை, பிரதேச காங்., கமிட்டிக்கு 30 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். இரண்டு உறுப்பினர்கள் இன்னும் நியமிக்கப்பட வில்லை.நியமனம் செய்யப்பட்ட 28 பேரில் 25 பேர் கலந்து கொண்டனர். மூவர் பங்கேற்கவில்லை. அதற்கான காரணம் குறித்து அவர்கள் கடிதம் அனுப்பி இருந்தனர்.கூட்டத்தில் பங்கேற்ற பிரதேச காங்.,கமிட்டி உறுப்பினர்கள், ஏனைய மாநில நிர்வாகிகளை நியமிக்கும் முழு அதிகாரத்தை அகில இந்திய காங்., தலை வருக்கு வழங்கி, கையொப் பமிட்டு அளித்தனர்.கூட்டத்தில் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் கமலக்கண்ணன், கந்தசாமி, ஷாஜகான், ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X