கணவரை மீட்டுத் தரக்கோரி குழந்தையோடு பெண் தர்ணா

Added : செப் 18, 2022 | |
Advertisement
புதுச்சேரி : கணவரை மீட்டுத்தர கோரி, மாமனார் வீட்டு முன்பு குழந்தையோடு பெண் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.லாஸ்பேட்டை, குறிஞ்சி நகரை சேர்ந்தவர் திலிப்சேஷன்,31; இவர், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன், கடலுார் மாவட்டம், சிதம்பரத்தை சேர்ந்த குணா,31; என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.இவர்கள் சென்னையில் 5 ஆண்டுகள் வாழ்ந்த நிலையில், தற்போது 5 வயதில் அவர்களுக்கு
கணவரை மீட்டுத் தரக்கோரி  குழந்தையோடு பெண் தர்ணா



புதுச்சேரி : கணவரை மீட்டுத்தர கோரி, மாமனார் வீட்டு முன்பு குழந்தையோடு பெண் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.லாஸ்பேட்டை, குறிஞ்சி நகரை சேர்ந்தவர் திலிப்சேஷன்,31; இவர், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன், கடலுார் மாவட்டம், சிதம்பரத்தை சேர்ந்த குணா,31; என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.இவர்கள் சென்னையில் 5 ஆண்டுகள் வாழ்ந்த நிலையில், தற்போது 5 வயதில் அவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது.இந்நிலையில், பணி காரணமாக திலிப்சேஷன், குடும்பத்தோடு ஹைதராபாத் சென்றார்.

பின், மீண்டும் சென்னையில் அதிக ஊதியத்தோடு பணி உள்ளதாக கூறி, நேர்முக தேர்வில் பங்கேற்க சென்றார்.அதன்பிறகு, திலிப்சேஷன், மனைவியுடன் இருந்த தொடர்பை துண்டித்துள்ளார். அவர் சென்ற ஒரு வாரத்திற்கு பின், மொபைலும் ஸ்விட்ச் ஆப் ஆனது. குணா, கணவர் பணிபுரிந்த நிறுவனத்திற்கு சென்று விசாரித்ததில், அவர் தற்போது பணியில் இல்லை என்பது தெரிந்தது.புதுச்சேரியில் உள்ள மாமனார், மாமியாரிடம் திலிப்சேஷனை பற்றி கேட்டபோது, பெங்களூரு சென்றதாக தெரிவித்தனர்.பின், அவர் சிதம்பரம் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் சென்ற போது, திலிப்சேஷன் தரப்பில் கோர்ட் மூலம் விவகாரத்து கோரியது தெரிந்தது.

திலிப்சேஷன் வெளிநாடு சென்றதாகவும் தகவல் வந்தது.இதையடுத்து, நேற்று லாஸ்பேட்டை, குறிஞ்சி நகரில் உள்ள மாமனார் வீடு முன்பு, குணா தனது குழந்தையுடன் அமர்ந்து, தர்ணாவில் ஈடுபட்டார்.அப்போது, தனது 12 சவரன் நகைகள், வங்கி கணக்கிலிருந்த 2 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு கணவர் தலைமறைவாகி விட்டதாக புகார் கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.லாஸ்பேட்டை புறக்காவல் நிலைய போலீசார், குணாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நடவடிக்கை எடுப்பதாக கூறி, அவரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று, விசாரணை நடத்தி வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X