கடலுார் மாவட்டத்தில் இன்று தடுப்பூசி முகாம்

Added : செப் 18, 2022 | |
Advertisement
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது.இது குறித்து கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு;கடலுார் மாவட்டத்தில் 37வது சிறப்பு கொரோனா மெகா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது. 3,742 இடங்களில் முகாம்கள் நடக்கிறது. 2வது தவணை செலுத்தியவர்கள் 9 மாத இடைவெளியாக இருந்தது குறைக்கப்பட்டு, தற்போது 6 மாத இடைவெளியில் கூடுதல் தடுப்பூசி



கடலுார் : கடலுார் மாவட்டத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது.இது குறித்து கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு;கடலுார் மாவட்டத்தில் 37வது சிறப்பு கொரோனா மெகா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது. 3,742 இடங்களில் முகாம்கள் நடக்கிறது. 2வது தவணை செலுத்தியவர்கள் 9 மாத இடைவெளியாக இருந்தது குறைக்கப்பட்டு, தற்போது 6 மாத இடைவெளியில் கூடுதல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அரசு வழிவகை செய்துள்ளது.

மேலும் 15.07.2022 முதல் 30.09.2022 வரை 75 நாட்களுக்கு மட்டுமே 18 வயது முதல் 59 வயது வரை உள்ள அனைவருக்கும் இலவசமாக கூடுதல் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.கடலுார் மாவட்டத்தில் தற்போது 12,78,000 பேருக்கு கூடுதல் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது. பொதுமக்கள் ஏதேனும் அடையாள அட்டை காண்பித்து அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள இந்த சிறப்பு தடுப்பூசி முகாமினை பயன்படுத்திக்கொள்ளவும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X