குடியிருப்போர் கூட்டமைப்பு கடலூரில் ஆர்ப்பாட்டம்

Added : செப் 18, 2022 | |
Advertisement
கடலுார் : கடலுாரில் தலைமை தபால் நிலையம் அருகில் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். இணைப் பொதுச் செயலாளர் புருஷோத்தமன் முன்னிலை வகித்தார். பொதுச் செயலாளர் மருதவாணன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் கண்ணபிரான், கோபால், லட்சுமி நாராயணன், காசிநாதன்
குடியிருப்போர் கூட்டமைப்பு  கடலூரில் ஆர்ப்பாட்டம்



கடலுார் : கடலுாரில் தலைமை தபால் நிலையம் அருகில் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். இணைப் பொதுச் செயலாளர் புருஷோத்தமன் முன்னிலை வகித்தார். பொதுச் செயலாளர் மருதவாணன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் கண்ணபிரான், கோபால், லட்சுமி நாராயணன், காசிநாதன் பங்கேற்றனர். கெடிலம் ஆற்றில் சர்க்கரை ஆலை கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். கடலுார் மாநகராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். கெடிலம், பெண்ணையாறு கரைகளை சீரமைத்து இரு கரைகளிலும் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பொருளாளர் சுகுமாறன் நன்றி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X