கடலூர் அரசு மருத்துவமனையில் குழந்தையை மாற்றியதாக புகார்

Added : செப் 18, 2022 | |
Advertisement
கடலுார் : கடலுார் அரசு மருத்துவமனையில் குழந்தையை மாற்றி கொடுத்ததாக வாலிபர் புகார் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கடலுார் மாவட்டம், வடலுாரை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரது மனைவி அம்பிகா, 28; இவர்களுக்கு 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. கர்ப்பிணியாக இருந்த அம்பிகாவை கடலுார் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்த்தனர்.அங்கு, நேற்று காலை 11:00 மணியளவில் குழந்தை பிறந்தது.

அங்கிருந்த ஸ்ரீதரிடம் குழந்தையை செவிலியர்கள் காண்பித்துவிட்டு சென்றுள்ளனர். மாலை 3:30 மணியளவில் மீண்டும் மருத்துவமனைக்கு வந்த ஸ்ரீதர், ஆண் குழந்தை பிறந்ததாக கூறி தன்னிடம் காண்பித்தனர். தற்பாது குழந்தையை மாற்றிவிட்டனர் என்று ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மறியல் செய்யப்போவதாக, மருத்துவமனை எதிரில் சாலைக்கு வந்தார்.புதுநகர் போலீசார், அவரை சமாதானப்படுத்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பணியில் இருந்த டாக்டர்கள் மற்றும் செவிலியர்களிடம் விசாரித்தனர். அங்குள்ள பதிவேட்டில் ஸ்ரீதருக்கு பிறந்தது பெண் குழந்தை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.அதையடுத்து, ஸ்ரீதரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். ஆனாலும் அதை ஏற்றுக்கொள்ளாமல் அவர் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X