ஏழு உலோக சிலைகள் பறிமுதல் கோட்டக்குப்பம் அருகே பரபரப்பு

Added : செப் 18, 2022 | |
Advertisement
மரக்காணம் : கோட்டக்குப்பம் அடுத்த பொம்மையார் பாளையத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஏழு உலோக சிலைகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அடுத்த பொம்மையார் பாளையத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன், 42; இவர், கடந்த 20 ஆண்டுகளாக ஆரோவில் மெயின் ரோட்டில் மெட்டல் கிராப்ட் என்ற பெயரில் உலோக சிலை செய்து, விற்பனை
ஏழு உலோக சிலைகள் பறிமுதல்  கோட்டக்குப்பம் அருகே பரபரப்பு



மரக்காணம் : கோட்டக்குப்பம் அடுத்த பொம்மையார் பாளையத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஏழு உலோக சிலைகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அடுத்த பொம்மையார் பாளையத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன், 42; இவர், கடந்த 20 ஆண்டுகளாக ஆரோவில் மெயின் ரோட்டில் மெட்டல் கிராப்ட் என்ற பெயரில் உலோக சிலை செய்து, விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார்.

நேற்று முன்தினம் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி., கதிரவன், இன்ஸ்பெக்டர் இந்திரா மற்றும் போலீசார் ஆரோவில் வழியாகச் சென்றனர்.அப்போது ராமச்சந்திரன் கடையில் விற்பனைக்காக வைத்திருந்த சிலைகளை ஆய்வு செய்தனர்.அதில், நான்கு அடி உயர அர்த்தநாதீஸ்வரர் சிலை, இரண்டு அடி உயர அர்த்தநாதீஸ்வரர் சிலை இரண்டு, நான்கு அடி உயர சிவகாமி அம்மன் சிலை, நான்கு அடி உயர கிருஷ்ணர் சிலை, புத்தர், மயில்வாகனம் சிலை தலா ஒன்று என ஏழு உலோக சிலைகளை சந்தேகத்தின் பேரில் பறிமுதல் செய்தனர்.தமிழகத்தில் ஏதேனும் கோவில்களில் இருந்த சிலைகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் எடுத்து செல்வதாகவும், கும்பகோணத்தில் இந்த சிலைகள் குறித்து ஆய்வு செய்த பின் தகவல் கொடுப்பதாகவும் கடை உரிமையாளரிடம் கூறிவிட்டு சிலைகளை எடுத்துச் சென்றனர்.


வேதியியல் கரைசலால் பழமையாகும் சிலைகள்

ஆரோவில் பகுதியில் உலோக சிலைகள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் பழங்கால கலை நயத்துடன் கூடிய சிலைகளை வடிவமைத்து விற்பனை செய்து வருகின்றனர். பழங்கால சிலைகளைப் போல் இருப்பதற்காக அமோனியம் குளோரைடு, காப்பர் சல்பைடு ( நவச்சாரம் துருசு) என்ற வேதியியல் பவுடரை கரைசலாக்கி சிலைகள் மீது ஊற்றி விடுகின்றனர். இதனால் சிலைகள் ஆயிரம் காலத்து பழமையான சிலைகளைப் போன்று காணப்படுகிறது. இதனால் வெளிநாட்டவர்கள் பழங்கால சிலைகள் என நினைத்து வாங்கிச் செல்கின்றனர். இந்த கடையில் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளும் இது போன்ற தயார் செய்த சிலைகள் தான் என கூறப்படுகிறது.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X